Fried Gram Health Benefits in Tamil : உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் புரதம் நிறைந்த பருப்புகளில், பொட்டுக்கடலை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதோ, அது எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பதே பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு இடத்தில் வெவ்வேறு பெயரில் அறியப்படுகிறது வறுகடலை எனப்படும் பொரி கடலை.
உடைத்த கடலை, பொட்டுக்கடலை, பொட்டுக்கடலா என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அதன் ஊட்டச்சத்து நமக்கு அவசியமானது. பிற பருப்புகளை போலவே மிக சிறந்த புரத பொருள் ஆகும். நார்ச்சத்தும், கொழுப்பு அமிலங்களும் அதிகமாக காணப்படும் பொட்டுக்கடலை மிக குறைந்த கலோரிகள் கொண்டது என்பதும், அதிக இரும்பு சத்து கொண்டது என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.
பொட்டுக்கடலையின் ஊட்டச்சத்துக்கள்
உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் ஆகிய வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 , பி 2, பி 3 , வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவற்றை கொண்ட பொட்டுக்கடலை அப்படியே சாப்பிடலாம். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால், பசிக்கும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை நொறுக்குத்தீனியாக உண்டால், அது ஊட்டச்சத்தையும் கொடுத்து உடல் எடை குறைப்பை துரிதப்படுத்தும்.
குறைந்த கலோரிகள் கொண்டது பொட்டுக்கடலை. 100கிராம் பொட்டுக்கடலையில் 480 கலோரிகள் உள்ளன. இரும்பு சத்து அதிகமாக உள்ள பொட்டுக்கடலை நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு நொறுக்குத்தீனி என்றும் சொல்லலாம்.
பொட்டுக்கடலையின் நோய் தீர்க்கும் பண்புகள்
செரிமானத்தை மேம்படுத்தும்
உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பொட்டுக்கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானம் மேம்படுகிறது. செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் பொட்டுக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மலச்சிக்கலை போக்கும்
குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட பொட்டுக்கடலை, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொட்டுக்கடலை நல்லது.
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!
இரத்த சர்க்கரையை சீராக்கும்
ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ள பொட்டுக்கடலை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது
இதயத்தின் பாதுகாவலன்
பொட்டுக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. அத்துடன் போலேட் , காப்பர் , பாஸ்பரஸ் என பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், உடலில் படிந்துள்ள தேவையான கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை பாதுகாக்க பொட்டுக்கடலை உதவும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய் வராமல் தடுக்கின்றன.
சைவ உணவில் சிறந்தது
கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ள பொட்டுக்கடலையில் புரத சத்து அதிகமாக உள்ளதால் சைவ உணவுக்காரர்களுக்கு அருமையான உணவுப்பொருள் பொட்டுக்கடலை என்று சொல்லலாம்.
பொட்டுக்கடலை பயன்பாடு
பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிடும்போது பித்தம் ஏற்படும் என்பதால், வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் குட்டிப்பசியும் தீரும், ஊட்டச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும்.
பொதுவாக தினசரி உணவில் பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்வது நல்லது என்பது உண்மை. தென்னிந்தியாவில் இட்லி தோசை என பல உணவுகளுடன் பொட்டுக்கடலை சட்னி உண்பது நல்ல காம்பினேஷன் என்று பிரபலமாகியுள்ளது. இதன் அடிப்படையே, பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமைக்காமல் அப்படியே உடலுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான். அதனால் தான், பொட்டுக்கடலை சட்னியில் ஒரு பல் பூண்டு சேர்ப்பார்கள். இது பொட்டுக்கடலையால் வாயுத்தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கும்.
விலை குறைவாக மிகவும் சுலபமாக நமக்குக் கிடைக்கும் பொட்டுக்கடலையின் பண்பு பெரிதாக தெரியாமல் போனதால் தான், தற்போது தேங்காய் சட்னி அரைக்கும்போதும் முந்திரியை பயன்படுத்தலாமா என்று சிந்திக்கின்றனர். உண்மையில், முந்திரிக்கு எந்தவகையில் இளைத்ததல்ல பொட்டுக்கடலை என்னும் வறுகடலை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ