Benefits of Garlic: பெரும்பாலும் அனைவர் வீட்டு சமையலறைகளிலும் பூண்டு காணப்படுகின்றது. இதன் சுவை மற்றும் நறுமணம் காரணமாக பலர் இதை விரும்பி உட்கொள்கிறார்கள். பல வகையான உணவு வகைகளில் இதை பயன்படுத்துகிறோம். உணவின் சுவையைக் கூட்டுவதோடு பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, செலினியம், ஆன்டி-ஆக்சிடென்ட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. குறிப்பாக பூண்டின் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக இருப்பது இதில் உள்ள அலிசின் என்ற கலவையாகும். தினம் ஒரு பூண்டு பல்லை உட்கொண்டால் அது குறிப்பிடத்தக்க அளவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகின்றது
பூண்டு வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. நோய் தொற்றுகள் மற்றும் பிற நோய்களுக்கு எதிராக இது உடலின் பாதுகாப்பில் பெரிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அலிசின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் செயல்பாட்டில் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
பூண்டில் உள்ள அலிசின் இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இது இரத்த அழுத்தத்தை (Blood Pressure) குறைக்க உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டை உட்கொள்வது நன்மை தரும்.
மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்
கொலஸ்ட்ரால்
பூண்டு கெட்ட கொலஸ்ட்ரால் (Cholesterol) அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் அளவு சரியாக பராமரிக்கப்பட்டால் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்து குறைகின்றது.
ஆன்டடி-ஆக்சிடென்ட்
செலினியம், வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்சிடென்ட்களும் (Antioxidant) ஃப்ளெவனாய்டுகளும் பூண்டில் உள்ளன. இவை கேன்சர், இதய நோய்கள், வயோதிகம் காரணமாக வரும் நோய்கள் போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்கின்றது.
செரிமானம் சீராகும்
பூண்டு செரிமான (Digestion) நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது பிரீபயாட்டிக் விளைவுகளைக் கொண்டுள்ளது. இது உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பூண்டை தினமும் உட்கொள்வதால் செரிமானம் சீராகி வாயுத் தொல்லை, அஜீரணம், உப்பசம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
நச்சு நீக்கம்
உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் (Detox) பூண்டு அதிக பங்காற்றுகிறது. சரியான வேளையில் நச்சுகள் நீக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் பல நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
பூண்டில் உள்ள கந்தகச் சேர்மங்கள், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மூட்டுவலி மற்றும் உடலில் பிற பாகங்களில் ஏற்படும் வலிக்கு இது நிவாரணம் அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ