இந்த நேரத்தில்..இப்படி.. இதை குடிங்க: மடமடனு எடை குறையும்

Weight Loss: உடல் எடையை குறைக்க, சில இயற்கையான எளிய வழிகளும் உள்ளன. அவற்றில் பலரால் முயன்று பார்க்கப்படும் ஒன்று வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2023, 03:13 PM IST
  • உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்.
  • எலுமிச்சை - வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • எலுமிச்சை தண்ணீர் குடிக்க இதுவே சரியான வழி மற்றும் சரியான நேரம் எது?
இந்த நேரத்தில்..இப்படி.. இதை குடிங்க: மடமடனு எடை குறையும் title=

Weight Loss: நவீன மற்றும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் பருமன் காரணமாக மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்நாட்களில் உடல் எடையைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி, யோகா, ஜிம், டான்ஸ் கிளாஸ், ஜூம்பா கிளாஸ் எனப் பல விஷயங்களை பலர் செய்து வருவதைக் காணலாம். சிலர் வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறைகளிலும் உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகிறார்கள். 

உடல் எடையை குறைக்க, சில இயற்கையான எளிய வழிகளும் உள்ளன. அவற்றில் பலரால் முயன்று பார்க்கப்படும் ஒன்று வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது. இது எடையை விரைவாக கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ நீரை (Lemon Water) அருந்தினாலும் எடை கட்டுப்படுவதில்லை என்று பலர் புகார் கூறுகின்றனர். எலுமிச்சை தண்ணீரை சரியாக குடிக்காததால் இது நிகழ்கிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எந்த தீர்வாக இருந்தாலும் அதை சரியான வழியில் செய்யவில்லை என்றால், அதற்கான பலன் கிடைக்காது. அனைத்து உணவுகளுக்கும் அவற்றுக்கான நேரம் உள்ளது. அதேபோல், எலுமிச்சை நீரை குடிக்கவும் சரியான வழியும் நேரமும் உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

எலுமிச்சை தண்ணீர் குடிக்க இதுவே சரியான வழி மற்றும் சரியான நேரம்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதை உட்கொள்ளும்போது உடல் எடை (Weight Loss) குறைவதோடு நம் உடலில் உள்ள அழுக்குகளும் வெளியேறுகின்றன. மேலும் இதன் காரணமாக உடல் உறுப்புகளும் சரியாக செயல்படுகின்றன. தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமது சருமம், கூந்தல் உட்பல உடலின் பல பாகங்களுக்கு நன்மை பயக்கும். எலுமிச்சம்பழம் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வெளியேறும்.

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... டயட்டில் தினமும் இஞ்சி சேர்த்தால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!

வெறும் வயிற்றில் எலுமிச்சை - வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீரைக் (Warm Water) குடிப்பது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறை மேம்படுகிறது. இது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் எலுமிச்சம்பழம் கலந்த வெந்நீரைக் குடித்து வந்தால், உடல் முழுவதிலும் உள்ள நச்சுகள் நீங்கும். 

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம்

தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் நமது உடல் பருமனை வேகமாக அதிகரிக்கின்றன. இதன் காரணமாக நாம் கடுமையான நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. உடல் பருமனால் நாளடைவில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற கடுமையான நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இது மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சீராக வாழ்க்கை செல்ல சீரக தண்ணீர் குடிங்க: இதில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News