எடை இழப்புக்கு ஆளி விதையை எப்படி சாப்பிடுவது: பெரும்பாலும் மக்கள் ஆளி விதையை உட்கொள்கின்றனர். நார்ச்சத்து, புரதம், தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமாண சத்துக்கள் இதில் உள்ளன. ஆனால் சில சமயம் தவறான முறையில் சாப்பிடுவதால் உடலுக்கு சரியான பலனை இது தருவதில்லை. ஏனென்றால், பலர் ஆளி விதையை பச்சையாக சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆளி விதையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக வறுத்து சாப்பிட வேண்டும். எனை ஆளிவிதையை உண்பதற்கான சரியான வழி என்ன என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!
ஆளி விதையை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை
ஆளி விதை லட்டுகள்: ஆளி விதை லட்டுகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலை வலுப்படுத்தி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதன் லட்டுகளை செய்ய, மாவு மற்றும் ஆளி விதையை லேசாக வறுக்கவும். இப்போது உலர் பழங்கள் சேர்த்தால் லட்டு தயார், இந்த லட்டு சாப்பிட்டால் உடல் வலுவடையும்.
அல்வா: ஆளி விதையை சேர்க்க, நீங்கள் ரவை மற்றும் கேரட் அல்வாவில் சேர்க்கலாம். வறுத்த ஆளி விதையை அதனுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
சாலட்: சாலட் உடல் ஆரோக்கியதிற்கு நன்மை பயக்கும். வறுத்த ஆளி விதையை சாலட் வடிவில் சாப்பிடுவது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கும் மற்றும் சாலட் சுவையாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையும் எளிதில் நீக்க உதவும். எனவே, ஆளி விதையை வறுத்த பின், சாலட்டில் தூவி சாப்பிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை கடைபிடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்கால முலாம்பழம் ‘வெண் பூசணிக்காய்’ ஆரோக்கிய நன்மைகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ