இஞ்சி இடுப்பு வேண்டுமா? இடுப்பு கொழுப்பை ஈசியா குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க

Turmeric For Back Fat Burning: இடுப்பு கொழுப்பை (Hip Fat) குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான, எளிய வழிகளிலும் நாம் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2024, 02:19 PM IST
  • உடலில் ஏதேனும் தொற்று நோய் இருந்தால், அதை நீக்க மஞ்சள் தேநீர் உதவியாக இருக்கும்.
  • மஞ்சள் தேநீர் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கிறது.
  • மஞ்சள் தேநீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இஞ்சி இடுப்பு வேண்டுமா? இடுப்பு கொழுப்பை ஈசியா குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க title=

Turmeric For Back Fat Burning: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பு (Belly Fat) மட்டுமல்லாமல் உடலில் பல பாகங்களில் மிக எளிதாக கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. இவற்றை கரைப்பது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக இந்நாட்களில் இடுப்புப்பகுதியில் பலருக்கு மிக அதிகமாக கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. இதனால் உடல் தோற்றம் கெடுவதுடன் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. பலருக்கு இடுப்பு பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர்ந்துவிடுவதால், இயல்பான நடமாட்டம் கூட பாதிக்கப்படுகின்றது.

இடுப்பு கொழுப்பை (Hip Fat) குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான, எளிய வழிகளிலும் நாம் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம். அப்படி ஒரு வழிதான் மஞ்சள். மஞ்சள் நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பண்புகள் காரணமாக, இது சூப்பர்ஃபுட் வகையிலும் வைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் சமையல், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. 

இடுப்பு கொழுப்பைக் குறைக்கவும் மஞ்சளை பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரியாது. மஞ்சள் மூலம் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி? கொழுப்பை குறைக்க இதை எப்படி உட்கொள்ள வேண்டும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மஞ்சளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் தெரிவித்தார். மஞ்சளில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. மஞ்சள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் எடையை குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு கப் மஞ்சள் தேநீர் இடுப்பு கொழுப்பையும் உடல் எடையையும் (Weight Loss) குறைக்க உதவும். 

மேலும் படிக்க | வாயு பிரச்சனைக்கு குட் பை செல்ல... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...

Turmeric Tea: மஞ்சள் தேநீர் தயாரிப்பது எப்படி?

- ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். 
- அதில் இஞ்சி மற்றும் சிறிய அளவில் மஞ்சள் தூள் சேர்க்கவும். 
- அந்த தன்ணீரை நன்றாக கொதிக்க விடவும். 
- நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், உடனடியாக அடுப்பை அணைத்து, ஆறவிடவும். 
- இதை ஒரு கோப்பையில் வடிகட்டி பருகலாம்.

மஞ்சள் தேநீரின் நன்மைகள்:

- உடலில் ஏதேனும் தொற்று நோய் இருந்தால், அதை நீக்க மஞ்சள் தேநீர் (Turmeric Tea) உதவியாக இருக்கும்.
- மஞ்சள் தேநீர் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கிறது. 
- இந்த நோய்க்குறி உடல் பருமனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. வளர்சிதை மாற்ற மாற்றங்களால்தான் வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சள் தேநீர் கொலஸ்ட்ரால் (Cholesterol) அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. 
- இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் (Blood Sugar Level) கட்டுக்குள் வைக்கிறது. 
- மஞ்சள் தேநீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது. 
- செரிமானம் சீராக இருந்தால், வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News