Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் சிறு தவறுகள் எற்பட்டாலும், முழு பலனை அடைய முடிவதில்லை. பல்வேறு இடங்களில் கொழுப்பு சேர்ந்து அது மொத்தமாக உடல் எடையை அதிகரிக்கின்றது. குறிப்பாக தொப்பை பகுதியில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை கரைப்பது மிகப்பெரிய பணியாகவே உள்ளது.
தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன. ஆகையால் உடல் பருமனை உடனடியாக குறைப்பது மிக அவசியம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை தவிர மன அழுத்தமும் இதற்கு ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. பெரும்பாலும், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு தொப்பை கொழுப்பும் அதிகமாகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், இவற்றாலும் அனைவருக்கும் நினைத்த பலன்கள் கிடைப்பதில்லை.
மேலும் உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் எவ்வளவு கனவம் செலுத்துகிறோமோ, அதே கவனத்தை என்ன செய்யக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும். இதற்கு உங்கள் உணவு மற்றும் உங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும். தொப்பை கொழுப்பு (Belly Fat) குறைந்து உடல் எடை குறைய நாம் நமது உணவு மற்றும் தினசரி வாழ்க்கை முறையில் செய்யக்கூடிய மாற்றங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொப்பை கொழுப்பை குறைக்க உங்கள் உணவில் இந்த விஷயங்களில் கவனம் தேவை:
- காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய மூன்றையும் தவிர்க்க கூடாது. சரியான வேளையில் சாப்பிடாமல் இருப்பது உடல் உப்பசத்திற்கு வழி வகுக்கும்.
- புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை வயிற்றுக்கு நிறைந்த உணர்வை அளிக்கின்றன.
- உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். இவை அவ்வபோது பசி எடுப்பதையும், வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.
- துரித உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், ஹெவியான உணவுகள், அதிக உப்பு, சர்க்கரை, காரம் கொண்ட உணவுகள், சரியாக சமைக்கப்படாத உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். இது உடலை நீரேற்றமாக வைத்திருகப்பதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையில் இந்த விஷயங்களில் கவனம் தேவை:
- மன அழுத்தத்துக்கும் தொப்பை கொழுப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் முதலில் மன அழுத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
- தினமும் இரவில் 7-8 மணி நேரம் தூங்குவது மிக அவசியம். போதுமான உறக்கம் இல்லாதபோது உடல் எடை அதிகரிகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாக உள்ளது. உடற்பயிற்சிகள், யோகா, விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது செய்வது அவசியமாகும்.
- தியானம் மற்றும் யோகா ஆகியவை மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியை அதிகரிக்க உதவுகின்றன. இதன் விளைவாக உடல் பருமனும் குறைகின்றது.
- உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடு முக்கியம். ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் அவ்வப்போது எழுந்து, கை, கால்களை நீட்டி மடக்குவது, நடப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் உடலில் கொழுப்பு சேராமல் தவிர்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கருவளையங்கள் மாயமாய் மறைய... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ