உடல் பருமன் என்பது பலரையும் கவலைப்பட செய்யும் ஒரு விஷயம். அழகான தோற்றத்திற்காக மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகவும், உடல் எடையை பராமரிப்பது மிகவும் அவசியமானது.
உடல் எடை அதிகமாக இருந்தால் பல்வேறு நோய்கள் வரும் என்பது தெரிந்தாலும், பரம்பரை காரணமாகவும், மாறிய வாழ்க்கை முறைகளாலும் உடல் எடை (Over Weight) அதிகரிக்கும் பிரச்சனையை பெரும்பாலன மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
உடல் பருமனைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை என்கிறது இந்திய உணவு முறை. உண்மையில் பாரம்பரிய இந்திய சைவ உணவு மிகவும் நன்மையானது. இந்திய உணவுகளை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, சீறுநீரக நோய், அல்சைமர் என ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வராது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் சுலபமான வழிகள் இவை:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவும். அதேபோல், தேநீர், காபி போன்ற பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை கலந்த நீரை அருந்தலாம். ஆனால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும், சர்க்கரை அல்லது உப்பு இரண்டில் அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் ஒன்றை தவிர்க்கவும்.
READ ALSO | நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்.
எலுமிச்சை சாறு அருந்திய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை சாப்பிடலாம். இரண்டு முட்டைகள், வேக வைத்த காய்கறிகள் மற்றும் எண்ணெய் சேர்க்காத தானியத்தை எடுத்துக் கொள்ளவும். காலை உணவுக்கு 3 மணி நேரத்திற்கு பிறகு ஏதாவது ஒரு பானத்தை அருந்தலாம். எலுமிச்சை சாறு, இளநீர் அல்லது க்ரீன் டீ என ஏதாவது ஒரு பானத்தை அருந்தவும்.
உடல் பருமனை குறைக்க மதிய உணவு மிகவும் முக்கையமானது. கீரை மற்றும் காய்கறிகளை (Food to control Weight) அதிகமாகவும், அரிசி, கோதுமை, தானியங்களை குறைந்த அளவும் சேர்த்துக் கொள்ளவும். மதிய உணவில் ஏதாவது ஒரு பருப்பு இருப்பது அவசியம்.
மாலையில் பசித்தால், க்ரீன் டீயுடன் அவல் பொரி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளவும். நொறுக்குத் தீனியை தவிக்கவும்.
இரவு உணவில் காய்கறிகள் மற்றும் பருப்பு கலந்த கூட்டு மற்றும் அரிசி அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பது நல்லது.
இது சைவ உணவு உண்பவர்களுக்கான மிகச் சிறந்த உணவு முறையாகும். வறுத்த, காரமானம், எண்ணெய் நிறைந்த உணவ்கலை தவிர்க்க வெண்டும். கெட்டக் கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும் உணவுகள், குளிர்பானங்கள், சோடா பானங்களை தவிர்க்க வேண்டும். இந்த உணவு முறையை இரண்டு மாதங்கள் தொடர்ந்தால், உங்கள் எடை குறைந்திருப்பதை நீங்களே உணரமுடியும்.
ALSO READ | வயிற்றில் வாயு பிரச்சனையா? சுலபமான வீட்டு வைத்தியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR