Side Effects of Coffee: காபி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காலை எழுந்தவுடன் காபி குடிக்கவில்லை என்றால் பலருக்கு அந்த நாளே துவங்காது. காபியின் சுவையும் மணமும் பலரை கட்டி இழுக்கும் வல்லமை கொண்டவை. இந்த உலகில் காபி பிரியர்கள் ஏராளம். ஆனால், எந்த ஒரு விஷயமுமே அளவுக்கு மீறினால் பாதிப்புதான். அதற்கு காபியும் விதிவிலக்கல்ல.
பலர் தங்கள் நாளை காபி குடித்தே தொடங்குகிறார்கள். தேநீரைப் போலவே காபியும் மக்களிடையே அதிகமாக விரும்பப்படுகிறது. மன அழுத்தம் இருந்தாலும் காபி, போர் அடித்தாலும் காபி, வேலை அதிகமாக இருந்தாலும் காபி, சந்தோஷம், துக்கம் அனைத்திலும் காபி. காலை முதல் இரவு வரை கப் கப்பாக காபி குடிப்பவர்கள் ஏராளம். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிகமாக காபி குடிப்பதால் உடலில் என்ன பாதிப்புகள் ஏற்படும்? ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக காபி ஆபத்து
ஒரு நாளைக்கு நாம் எத்தனை முறை காபி குடிக்கிறோம் என்பதில் மிக கவனமாக இருப்பது முக்கியம். காபி குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், காபியை அதிகமாக குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
காபியால் இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவு
- அதிகமாக காபி உட்கொள்வது பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
- இதை நம்மால் உடனடியாக உணர முடியாது.
- எனினும் இதன் விளைவுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தெரியும்.
- அதிக காபி குடிப்பது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவதாகவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது அதிகமாகும்போது, அதிகமாக காபி குடிப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
- மேலும் உயர் இரத்த அழுத்த அபாயமும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | ஓவர் எடை உடனே குறைய இந்த காய்களை சாப்பிடுங்க: தொப்பை கொழுப்பும் காணாமல் போகும்!!
அதிகமாக காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் பிற பக்கவிளைவுகள்
- செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும்.
- உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடும்.
- அதிகப்படியான மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
- கர்ப்ப காலத்தில் இது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
- அசிடிடி அதாவது உடலில் அதிக அமிலத்தன்மை பிரச்சனையும் தொடங்கும்.
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கும்.
- புற்றுநோய் அபாயம் குறையும்.
- நீரிழிவு நோயின் அபாயமும் இதனால் குறைவதாக கூறப்படுகின்றது. ஆனால் சர்க்கரை இல்லாத காபி குடிக்க வேண்டும்.
- காபி கலோரிகளை எரிக்க உதவுகிறது.
- காபி பித்தப்பை நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?
ஒருவர் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கப் காபி உட்கொள்ளலாம் என கூறப்படுகின்றது. எனினும், 4 கப் காபிக்கு மேல் குடிப்பது தீங்கு விளைவிக்கும். காபியில் காஃபின் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி கொண்ட சில சுவையான சிற்றுண்டிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ