சிறுநீரகக் கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய பழங்கள்: சிறுநீரகம் மனித உடலின் வடிகட்டி என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் உள்ள அழுக்கு மற்றும் திரவங்களை வடிகட்டுகிறது, நச்சுகளை நீக்குகிறது. இது பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான மோசமான பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரக கல் பிரச்ச்னை. ஒருவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், அவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் வரத் தொடங்குகின்றன. ஆகையால் இதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில் ஒரு தீவிரமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.
சிறுநீரக கற்கள் ஏன் ஏற்படுகிறது?
பொதுவாக, ஆரோக்கியமற்ற உணவை உண்ணும்போதோ அல்லது அழுக்கு அல்லது தீங்கு விளைவிக்கும் திரவத்தை உட்கொள்ளும்போதோ அது சிறுநீரகக் கற்களுக்கு (Kidney Stone) வழிவகுக்கும். ஆகையால் சிறுநீரக கற்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நோயாளிகள் எந்தெந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சிறுநீரக நோயாளிகளுக்கான பழங்கள்
பொதுவாக நாம் பழங்களை ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதுகிறோம். இது பெரிய அளவில் உண்மைதான். ஆனால் அனைத்து பழங்களும் அனைத்து நோய்களுக்கும் ஏற்றது அல்ல. குறிப்பாக சிறுநீரக கல் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் சாப்பிடுவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
சிறுநீரக கற்கள் இருந்தால் இந்த பழங்களை சாப்பிடலாம்
- சிறுநீரக கல் நோயாளிகளுக்கு, அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களை உட்கொள்வதை அதிகரிக்கலாம்.
- சிறுநீரகக் கற்கள் அதிகரிக்கும் போது, கால்சியம் நிறைந்த பழங்களை முடிந்தவரை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதற்கு கருப்பட்டி, திராட்சை, கிவி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.
- சிறுநீரகக் கல் உள்ள நோயாளிகள் சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை நீக்குவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதற்கு ஆரஞ்சு, சாத்துக்குடி திராட்சைகளை அதிகமாக சாப்பிடலாம்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க தினமும் இந்த ‘ட்ரிங்க்’ குடித்தால் போதும்
சிறுநீரகக் கற்கள் இருந்தால் இந்த 5 பழங்களை உட்கொள்ள வேண்டாம்
சிறுநீரகக் கற்கள் பிரச்சனை இருக்கும் போது, சில பழங்களை (Fruits) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றை சாப்பிட்டால் கற்கள் பிரச்சனை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். அந்த பழங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. மாதுளை
2. கொய்யா
3. உலர் பழங்கள்
4. ஸ்ட்ராபெரி
5. புளுபெர்ரி
தக்காளி
தக்காளி பெரும்பாலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக உள்ளது. சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிக்கு இது ஆபத்தானது. உங்களுக்கு தக்காளி பிடிக்கும் என்றால், காய்கறியில் சேர்ப்பதற்கு முன் அதன் விதைகளை அகற்றிவிட்டு சேர்ப்பது நல்லது.
சிறுநீரக கல் அறிகுறிகள்
- சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி
- அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு
- கடுமையான வயிற்று வலி
- பசியின்மை
- குமட்டல்
- காய்ச்சல்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும் பழங்களின் பட்டியல்! முதலிடத்தில் புளூபெர்ரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ