இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..!!!

வரலாற்றில் தொற்றுநோய் பரவலின் போது, மூலிகை மருந்துகள் சிறந்த வகையில் சிகிச்சைக்கு உதவியதை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொரொனா தொற்று நோய்க்கான மூலிகை மருந்து பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 22, 2020, 06:37 PM IST
  • வரலாற்றில் தொற்றுநோய் பரவலின் போது, மூலிகை மருந்துகள் சிறந்த வகையில் சிகிச்சைக்கு உதவியதை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொரொனா தொற்று நோய்க்கான மூலிகை மருந்து பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..!!!

மூலிகை மருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக பரிசோதனை செய்ய WHO அனுமதி வழங்கியுள்ளது. உலகில் உள்ள சில நாடுகளில், தொற்று நோய்க்கான சிகிச்சையில் மூலிகை மருந்துகளை பரிசோதனை செய்ய  அனுமதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகை மருந்துகளில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை செய்ய  WHO உரிமம் வழங்கும்.

வரலாற்றில் தொற்றுநோய் பரவலின் போது, மூலிகை மருந்துகள் சிறந்த வகையில் சிகிச்சைக்கு உதவியதை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று நோய்க்கான மூலிகை மருந்து பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மூலிகை மருந்துகள் எபோலா மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கான சிகிச்சையில் பெரிதும் உதவியது.

மூலிகை மருந்துகள் மூலம் கோவிட் -19 உடன் போராடுவதற்கான உடல் திறன் மேம்படும். உலகில் தற்போது பல நாடுகள் மாற்று சிகிச்சை குறித்தும் யோசித்து வருகின்றன. இதில் இந்தியாவில் ஆயுர்வேதம், சீன இயற்கை மருந்துகள்,  சில ஆப்பிரிக்க வன மூலிகைகள் அனைத்தும் அடங்கும்.

மேலும் படிக்க | அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம் நீக்கம் ....!!!!

மூலிகை மற்றும் பிற மருந்துகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய தற்போது உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. கோவிட் உடன் போராடுவதில்  ஆயுர்வேதம் பல முறை திறமையானது என்பதை உணர்த்தியுள்ளது . ஆயுஷ் (Ayush) மூலம் இந்திய அரசு பல விதமான கஷாயம் மற்றும் பல ஹோமியோபதி மருந்துகளை மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஐ.ஐ.டி டெல்லியின் டயலாப் (Dailab) மற்றும் ஜப்பானின் தேசிய தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம், அஸ்வகந்தா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள மூலிகை என்று நம்புகிறது. அஸ்வகந்தா உடலில் நோயை எதிர்த்துப் போராட என்சைம்கள் ( மற்றும் MPro எனப்படும் புரதங்களை உருவாக்குகிறது. இதனால் நோயாளி மிக வேகமாக குணமடைகிறார். இதேபோன்ற சில வைரஸை எதிர்க்கும்  பண்புகள் நியூசிலாந்தின் புரோபோலிஸ் Propolis என்ற மூலிகையிலும்  காணப்படுகிறது. இது உடலில் இருக்கும் வைரஸை பலவீனமடையச்செய்கிறது. கனடா நிறுவனமான மெடிகாகோ (Medicago) மற்றும்  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனமும் மூலிகை  அடிப்படையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க | குழந்தைகளின் உயிரைக் காக்க, உடல் உறுப்புகளை விற்க துணிந்த ஏழை தாய்..!!!

மூலிகைகளை பொருத்தவரை, இந்தியா உலகின் மிக பாரம்பரியம் மிக்க ஒரு மையமாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், விஞ்ஞானத்தின் ஆதரவுடன், மூலிகை சிகிச்சையின் வெற்றிகரமான இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக  சுகாதார வசதிகள் மிகக் குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்தியா உதவியாக இருக்கும், மூலிகை மற்றும் ஆயுர்வேத கலவையுடன், கோவிட் -19 ஐ வேருடன் ஒழிக்க முடியும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News