நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த வைட்டமின் அதிகமானால் என்ன ஆகும்?

Vitamin C And Side Effects: தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் எதுவும் உடல் நலனுக்கு ஆரோக்கியமானதல்ல எனும்போது, ஹீமாடோக்ரோமாடோசிஸ் அல்லது  சிறுநீரக கற்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2023, 11:07 AM IST
  • ஹீமாடோக்ரோமாடோசிஸ் பிரச்சனை உள்ளவரா?
  • சிறுநீரக கற்கள் பிரச்சனை உண்டா?
  • அதிக வைட்டமின் சி ஆபத்தானது
நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த வைட்டமின் அதிகமானால் என்ன ஆகும்? title=

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இது நமது சருமம், முடி உட்பட நமது வெளிப்புற அழகை மேம்படுத்தும். ஹைப்பர் பிக்மென்டேஷன், உணர்திறன் வாய்ந்த சருமத்தை பாதுகாப்பது என பல தோல் நோய்களைத் தடுக்கும் திறன் கொண்டது. ஆனால், உடலுக்கு தேவையான வைட்டமின் சி, சிலரின் உடல் நலத்தை பாதிக்கும் என்பது தெரியுமா?

வைட்டமின்-சி (Vitamin C) என்பது பல்வேறு உணவு மூலங்களிலிருந்து உடலால் உறிஞ்சப்படும் ஒரு வைட்டமின் ஆகும், பெரும்பாலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, பப்பாளி போன்றவை மற்றும் வெவ்வேறு காய்கறிகளிலிருந்தும் இது கிடைக்கிறது. எலும்பு ஆரோக்கியம், திசுக்கள், நரம்புகள் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவும் வைட்டமின்-சி அனைவருக்கும் அவசியமானது. நமது உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதற்கும் வைட்டமின் சி இன்றியமையாதது. 

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்! 

ஆனால், ஹீமாடோக்ரோமாடோசிஸ், இரும்பு சத்து அதிகமாக இருப்பது அல்லது கடந்த காலத்தில் சிறுநீரக கற்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு வைட்டமின்-சி பாதகமான விளைவை எடுத்தும்.அதிலும், உடலின் தேவைக்கு அதிகமாக வைட்டமின் சி எடுத்துக் கொண்டால், ஒவ்வாமை ஏற்படும்.

அதோடு உடலில் பக்க விளைவுகளும் ஏற்படும். குமட்டல், வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, பலவீனம், எடை இழப்பு, வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்புகள், ​​சிறுநீர் கழிக்கும்போது வலி காய்ச்சல், நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலின் தேவைக்கேற்ப மருத்துவர் பரிந்துரைத்தபடி சரியான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

ஏனென்றால், சிலர் வேறு சில உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களாக இருக்கலாம். அதில், அமில எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதில் உள்ள அலுமினியம் அஸ்கார்பிக் அமிலத்துடன் வினைபுரியக்கூடும், எனவே கவனமாக இருக்க வேண்டும்.  

மேலும் படிக்க | கணிணியில் அதிகம் வேலையா... கண்ணை காக்கும் ‘இந்த’ உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!

ஆனால், வைட்டமின் சி குறைபாடு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதோடு, வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், இரத்த சோகை நோய் ஏற்படலாம். எனவே, வைட்டமின் -சி உள்ள உணவுகள், குறிப்பாக பழங்களை உண்டால் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும்.

இருந்தாலும், தேவைக்கு அதிகமாக விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிடுவது தேவையில்லை. ஏனென்றால், இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்தை (Nutritious Food), மனித உடலால் சேமித்து வைக்க இயலாது. உடலில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து, சிறுநீரில் வெளியேறிவிடும்

fruits

எனவே தினசரி தேவைக்கான வைட்டமின் சி சத்தை, ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவில் இருந்து தான் பெறவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

வைட்டமின்-சி குறைபாட்டை நீக்கும் பழங்கள்
உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் சப்ளிமெண்ட்ஸுக்கு பதிலாக மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்வது நல்லது. இது தவிர ஆரஞ்சு, எலுமிச்சை, போன்ற பழங்களை சாப்பிடலாம். இது தவிர பெர்ரி வகை பழங்கள், ப்ரோக்கோலி, கொய்யா போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சருமத்தை பளபளக்கச் செய்யும் யம்மி ஜூஸ்! அபார ருசியில் கேரட் + கொத்தமல்லி பானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News