AAP கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அல்கா லம்பா அறிவிப்பு...

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அல்கா லம்பா ராஜினாமா செய்துள்ளார்!

Last Updated : Aug 5, 2019, 09:09 AM IST
AAP கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அல்கா லம்பா அறிவிப்பு... title=

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அல்கா லம்பா ராஜினாமா செய்துள்ளார்!

AAP கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும், வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி MLA அல்கா லம்பா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தெரிவித்தார்.

வாக்குவங்கி அரசியல் நடத்த கெஜ்ரிவால் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அல்கா, வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். டெல்லி சாந்தினி சவுக் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான அல்கா லம்பா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினாலும் எம்.எல்.ஏவாக மக்களுக்கு தொண்டாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அல்கா லம்பா தமது ராஜினாமா கடிதத்தை டிவிட்டரில் பதிவு செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அல்கா லம்பா கூறுகையில்; கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து விரைவில் ராஜினாமா செய்வேன். ஆனால், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் என்று லம்பா கூறினார். 

இவரது கருத்துக்கு பதிலளித்த ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவ்ரப் பரத்வாஜ் ட்வீட்டில், "கடந்த காலங்களில் இதை அவர் ஒரு டஜன் முறை அறிவித்துள்ளார். கட்சித் தலைமைக்கு எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தை அனுப்ப 1 நிமிடம் ஆகும். அதை ட்விட்டரிலும் ஏற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, லம்பா PTI-யிடம் தான் பல சந்தர்ப்பங்களில் கட்சியால் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்குப் பின்னர், அவர் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து பொறுப்புக்கூறலைக் கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

 

Trending News