புனித அமர்நாத் யாத்திரை பக்தி பரவசத்துடன், ஹர ஹர மகாதேவா என்ற முழக்கங்களுடன் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் சிவ பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
புனித அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள பகவதி நகரில், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் குழுவை அனுப்பி வைத்தார்.
ஆண்டுதோறும், கந்தர்பால் பால்டால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் ஆகிய இரண்டு வழித்தடங்களிலிருந்தும் அமர்நாத் நோக்கி பக்தர்கள் செல்கின்றனர். இன்று அதிகாலை தொடங்கிய பயணம், இன்று பின்மாலையில், அடிப்படை முகாமை அடையும்.
முகாமில் இருந்து நாளைக் காலை, அதாவது ஜூலை 1 முதல், இந்த இரண்டு அடிப்படை முகாம்களிலிருந்தும் பக்தர்கள் அமர்நாத் குகைக்குச் கால்நடையாக நடக்கத் தொடங்குவார்கள்.
அமர்நாத் யாத்திரையின் முதல்கட்டமாக, அடிப்படை முகாமிற்கு செல்லும் யாத்திரை இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிவ பக்தர்கள் பனிலிங்க தரிசனத்திற்கான தங்கள் கனவு, நனவாகும் மகிழ்ச்சியில் சிவகோஷங்களை எழுப்பினார்கள். பயணிகள் நிரம்பிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் காஷ்மீர் நோக்கி செல்லுத் தொடங்கியபோது, ஹரஹர மகாதேவ் என்ற கோஷங்கள் விண்ணை முட்டின.
பகவதி நகர்
அமர்நாத் யாத்திரை 2023 தொடங்கியவுடன், பகவதி நகரில் மீண்டும் மக்கள் நடமாட்டம் தொடங்கியது. ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் பேஸ்கேம்ப் பகவதி நகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று ( 2023, ஜூன் 29 வியாழக்கிழமை) காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மக்கள் தங்கள் ஆவணங்கள், மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் அனுமதிச் சீட்டுகளை சரிபார்த்த பிறகு யாத்ரி நிவாஸுக்குள் நுழைந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இருப்பினும், யாத்ரி நிவாசில் இடம் கிடைக்காதவர்கள், வெளியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
மேலும் படிக்க | இடத்தை மாற்றிய எதிர்கட்சிகள்... சிம்லாவில் கூட்டத்தை கலைத்தது ஏன் - முழு விவரம்!
பனிலிங்க குகைக்கு அருகில் தங்க அனுமதியில்லை
அமர்நாத் யாத்திரைக்கான 2023க்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மந்தீப் பண்டாரி தெரிவித்தார். முதன்முறையாக இந்தப் பயணம் 62 நாட்கள் நடைபெறவுள்ளது. தினமும் 70 ஆயிரம் பயணிகளுக்கு தங்கும் வசதி மற்றும் உணவுக்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், கடந்த ஆண்டு குகைக்கு அருகில் ஏற்பட்ட மேகவெடிப்பை கருத்தில் கொண்டு, இம்முறை புனித குகைக்கு அருகில் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, குகைக்கு அருகில் இருந்த கூடாரங்கள் மற்றும் லங்கர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
முதன்முறையாக ட்ரோன் பயன்பாடு
சுமார் 62 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எஃப் என பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகள் ஜம்மு- காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை முதன்முறையாக வெடிகுண்டு தடுப்பு நாய்ப் படையுடன், ஆளில்லா விமானப் பிரிவுகளும் யாத்திரை பாதையில் நிறுத்தப்படுகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு முதல் காஷ்மீர் வரையிலும், சர்வதேச எல்லையில் இருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
மேலும் படிக்க | போதையில் பரதநாட்டியம் போட்ட குடிமகன் - குமாரபாளையத்தில் அட்டகாசம்: வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ