இந்திய ரிசர்வ் வங்கி (RBI), புதிய 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது!
வெளியாகவுள்ள புதிய 10ரூ நோட்டுகள் சாக்லேட் பழுப்பு வண்ணத்தை கொண்டிருக்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த புதிய நோட்டுகள், கொனார்க் சன் கோயிலின் படத்தை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அரசாங்கத்தின் வடிவமைப்பு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 1 பில்லியன் புதிய ரூ 10 நோட்டுகளை அச்சிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன!
இதற்கு முன்னதாக கடந்த 2005-ல் 10ரூ நோட்டுக்களின் வடிவம் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
RBI to shortly issue Rs.10 denomination banknotes. All the banknotes in the denomination of Rs.10 issued by RBI in the earlier series will continue to be legal tender. pic.twitter.com/2tSzRBNLuO
— ANI (@ANI) January 5, 2018