புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட 68 வருடங்களுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம், அதனை உருவாக்கிய டாடா நிறுவனத்தின் கைகளுக்கு திரும்பியது என்று சொல்லப்படுகிறது. இதன் பின்னணி என்ன? ஏர் இந்தியாவை, இந்திய அரசு தொடங்கவில்லையா? ஏன்? எப்படி? எதற்கு என பல கேள்விகள் தோன்றலாம். உருவாக்கம் முதல் மீண்டும் தாய் நிறுவனத்திற்கே திரும்பிய ஏர் இந்தியாவின் பயணம் இது...
புகழ்பெற்ற தொழிலதிபரும் இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானியுமான ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய் (JRD Tata), டாடா விமான நிறுவனத்தை துவங்கினார்.
டாடாவின் நிறுவனங்களின் பெயரான Tata என்ற பெயரை உள்ளடக்கி, ஏர் டாடா ஏர்லைன்ஸ் என விமான நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம் இந்திய அரசு, ஏர் டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை கையகப்படுத்தியது.
அன்று நாட்டுடமை கொள்கையால் இந்திய அரசு கையகப்படுத்திய விமான நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் பெரும் நட்டத்தில் இயங்கிவருவதால், அதை மீண்டும் தனியார்மயமாக்குகிறது மத்திய அரசு.
Amazing advertisement by TATA
Cc@hvgoenka pic.twitter.com/faH18KgHlt
— Dr. Ajit Varwandkar (@Varwandkar) October 11, 2021
1932 இல் ஜேஆர்டி டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியாவின் 49 சதவிகித பங்குகளை, 1947ஆம் ஆண்டில் இந்திய அரசு வாங்கியது. 1953 இல், அரசாங்கம் மீதமுள்ள பங்குகளை வாங்கிக் கொண்டு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது. அப்போது, டாடா குழுமத்திற்கு இந்திய அரசு கொடுத்த தொகை 2.8 கோடி ரூபாய் ஆகும். ஜேஆர்டி டாடா 1977 வரை அதன் தலைவராக இருந்தார்.
ஏர் இந்தியா தனது முதல் சர்வதேச பயணத்தை மும்பை-லண்டன் வழித்தடத்தில் தொடங்கியது. இந்த விமானத்தில் தான், ஏர் இந்தியாவின் சின்னமான மகாராஜா (iconic mascot Maharaja) பயன்படுத்தப்பட்டது.
ஏர் இந்தியா இன்டர்நேஷனல் (Air India International) என்ற சகோதர நிறுவனத்தின் மூலம் சர்வதேச சேவை தொடங்குவதற்கு ஜேஆர்டி அரசிடம் அனுமதி கேட்டார். அதற்கு அரசு ஒப்புக் கொண்டது. அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதையடுத்து, லண்டனுக்கு ஏர் இந்தியா சர்வதேச விமானம் ஜூன் 1948 முதல் தொடங்கியது. அந்த விமானத்தில் ஜேஆர்டி டாடாவும் இருந்தார். ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய விமான நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது ஏர் இந்தியா. 1960 முதல் நியூயார்க்கிற்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது ஏர் இந்தியா.
சர்வதேச விமானங்களை இயக்கிய ஏர் இந்தியாவிற்கு ஏற்பட்ட நட்டங்களை குறைப்பதற்காக, அது உள்நாட்டு விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைக்கப்பட்டது. ஆனால் 2007க்குப் பிறகு அது லாபம் ஈட்டவில்லை. 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஏர் இந்தியாவின் கடன் 61,562 கோடி ரூபாய் ஆகும். அதுமட்டுமல்ல, அது செயல்படும் ஒவ்வொரு நாளுக்கும் அரசுக்கு 20 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும், அதாவது ஏர் இந்தியா இயங்கினால் அது ஆண்டுக்கு 7,300 கோடி நட்டத்தை ஏற்படுத்தும்.
141 விமானங்கள் மற்றும் 55 சர்வதேச விமானங்கள் உட்பட 173 இடங்களின் நெட்வொர்க்கிற்கான அணுகல் தவிர, ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் மகாராஜா போன்ற பிராண்டுகளின் உரிமையும் டாடா நிறுவனத்திற்கு இருக்கும்.
2021 டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனத்தை கைமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இல்லாவிட்டால், நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நட்டம் அரசுக்கு தொடரும் என்பது, வரி செலுத்தும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.
2.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய விமான நிறுவனத்தை, 28,844 கோடி ரூபாய்க்கு இந்திய அரசு விற்பனை. மேலோட்டமாக பார்த்தால் நல்ல லாபம் தான் என்று தோன்றுகிறதா? இல்லை அரசுக்கு ஆயிரக்கான கோடி ரூபாய்கள் நட்டத்தை ஏற்படுத்தி வருவதால் இந்த விற்பனை முக்கியத்துவம் பெறுகிறது.
அதிலும் 2017ஆம் ஆண்டில் தொடங்கிய விற்பனை நடவடிக்கை 4 ஆண்டுகளாக இழுபறியாக இருந்தது என்றால், ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள சிக்கல்களை புரிந்துக் கொள்ளலாம்.
READ ALSO | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை...
எது எப்படியிருந்தாலும் சரி, இது அரசுக்கு ஏர் இந்தியா ‘டாடா’ சொல்லும் கதையா, இல்லை நட்டத்திற்கு அரசு சொல்லும் டாட்டாவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
தற்போது அரசுக்கு இந்த விற்பனை மூலம் 28,844 கோடி ரூபாய் கிடைக்கும். மத்திய அரசு கோரிய ஏலத்தில், நான்கு ஏலதாரர்கள் பங்கேற்றனர். இறுதிகட்டத்திற்கு, டாடா நிறுவனம் அஜய் சிங் மட்டுமே வந்தனர். அதில் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது.
தற்போது, டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து Vistara விமான நிறுவனத்தையும் மலேசியாவின் ஏர் ஏசியாவுடன் இணைந்து ஏர் ஏசியா நிறுவனத்தையும் இயக்குகிறது.
Also Read | டாடா குழுமத்திடம் செல்கிறதா ஏர் இந்தியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR