பாஜக - காங்கிரஸ், இருகட்சிகளும் மக்கள் நலனை விரும்பாத கட்சி... மாயாவதி தாக்கு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2019, 12:22 PM IST
பாஜக - காங்கிரஸ், இருகட்சிகளும் மக்கள் நலனை விரும்பாத கட்சி... மாயாவதி தாக்கு! title=

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார். 

உத்திர பிரதேச மாநலம் லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்., நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்கள் பாஜக கட்சிக்கு தகுந்த பாடம் புகட்டியது, இதேப்போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் கற்பிப்பர் என தெரிவித்தார்.

மேலும் பாஜக அரசு போலி வாக்குறுதிகளை அளிப்பத்தில் வல்லவர்களாக உள்ளனர், இந்த போலி வாக்குறுதி வெள்ளத்தில் இனி மக்கள் குளிக்கு விரும்ப மாட்டார்கள். அவர்களது போலி வாக்குறுதிக்கு எடுத்தக்காட்டாய் அவர்களது விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை மட்டும் கூறினால் போதும், ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் விவசாயிகளின் கடணை முழுவதுமாக நீக்க வேண்டும் என்பது தான் எனவும் குறிப்பிடார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு வலுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட மாயாவதி, காங்கிரஸ் கட்சியையும் விட்டு வைக்கவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் பெரும்பாலான காலம் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி நாட்டில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் கொண்டுவரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக உத்திரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி, வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளன.

காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர். எனினும் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உத்திரபிரதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், இதேபோன்று பிஹாரில் பாஜக-வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் தலைவர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News