வகுப்பறையில் மாணவர் சுட்டுக்கொலை!

Last Updated : Sep 2, 2017, 05:17 PM IST
வகுப்பறையில் மாணவர் சுட்டுக்கொலை! title=

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் அவரது வகுப்பு தோழர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வகுப்பறை சி.சி.டி.வியில் இந்த காட்சிபதிவாகி உள்ளது. இந்த பதிவில் மாணவர் ஒரு வகுப்பறையில் தனது துப்பாக்கியால் சுடுவது காட்சிபடுத்தப் பட்டிருகிறது.

சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று மாணவர்களுக்கிடையில் நடந்த சண்டையின் விளைவாக இந்த குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் மொஹித் என தெரிகிறது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுமித் மற்றும் குணால் என தெரிகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் ஹரியானா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும் குற்றம் சாட்டப்பட்ட சுமித் மற்றும் குணால் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டனர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரண செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending News