மோசமான டெல்லி காற்று தரம்: 10 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை!

டெல்லியின் காற்று தரம் மேலும் மோசமானதையடுத்து, அனைத்து கட்டுமான பணி நடவடிக்கைகளையும் 10 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2018, 10:35 AM IST
மோசமான டெல்லி காற்று தரம்: 10 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை!  title=

டெல்லியின் காற்று தரம் மேலும் மோசமானதையடுத்து, அனைத்து கட்டுமான பணி நடவடிக்கைகளையும் 10 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.....

நாளுக்கு நாள் டெல்லியின் காற்று தரமானது மோசமான நிலையயை ஆய்ந்து வருகிறது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையே இதற்கு காரணம். காற்று தர குறியீட்டு எண் 50-க்குள் இருப்பதே சரியானது. எனினும் 100-லிருந்து 200-க்குள் இருந்தால் மிதமானது. ஆனால், டெல்லியின் சில பகுதிகளில் இன்று காற்று தர குறியீட்டு எண் 469 ஆக உயர்ந்துள்ளது. இது மிக கடுமையாக காற்று மாசு அடைந்திருப்பதை காட்டும் அறிகுறி என்று மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் புரே லால் கூறுகையில், டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் அடையாது என்று நம்புவோம். ஆனால் நிலைமை மோசமாகி விட்டால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

டெல்லி அருகிலுள்ள மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகளை எரிப்பதும், காற்று வீசும் வேகம் குறைந்ததுமே இதற்கு காரணம் என்று காற்று தரம் குறித்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றுத்தரம் மோசமான நிலையில் இருப்பதால் தற்போது டெல்லி முழுவதும் கட்டுமான பணிகளுக்கு பத்து நாள்களுக்கு தடை விதித்துள்ளது. 

 

Trending News