தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்!!
மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவாசா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது எழுப்பட்ட தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைகளின் போது தன்னுடைய கருத்தை கவனத்தில் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இனிவரும் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் சுனில் அரோராவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெரும்பான்மையான நபர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை அறியாதவர் போல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையர் மீது மரபை மீறி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி, தேர்தல் பிரச்சார கூட்டங்களின்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த புகார்களின் மீதான விசாரணையின் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் கலந்து கொள்வது வழக்கம்.புகார்களின் மீதான விசாரணைகளில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையே உத்தரவாக பிறப்பிக்க முடியும். அதன்படி இரு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நன்னடத்தை விதிமீறல்கள் எதுவும் நடைபெற்றுவிடவில்லை என நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மீதான புகார்களை தேர்தல் ஆணையம் தள்ளபடி செய்திருந்தது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடுநிலைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை எனவும் ஆலோசனை கூட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த என்னுடைய கருத்துக்களின் அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தில் கருத்து மோத ல் என்ற சர்ச்சை தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் தேர்தல் ஆணையத்துக்குள் இதுபோன்ற கருத்து முரண்பாடு கள் ஏற்பட்டிருப்பதாகவும் முக்கிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் ஒரே மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற எந்த அவசிய மும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Chief Election Commissioner Sunil Arora issues statement on EC Ashok Lavasa's purported letter to him, says, 'an unsavory and avoidable controversy reported in sections of media today about internal functioning of ECI in respect of handling of Model Code of Conduct.' (3/3) pic.twitter.com/yuRxOHMaGL
— ANI (@ANI) May 18, 2019