திருவனந்தபுரத்தில் உள்ள கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே புயலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழையானது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதை தொடர்ந்து கடந்த புதன் அன்று திருவனந்தபுரத்தை ஒகி புயல் வந்தடைந்தது.
இதை தொடர்ந்து, தற்போது ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகி புயலால் மீட்கப்பட்ட மீனவர்கள், திருவிதாங்கில் உள்ள ஏர் ஃபோர்ஸ் நிலையத்திற்கு பாதுகாப்புப்படையினர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
Kerala: Rescued fishermen brought to Trivandrim Air Force Station, later admitted to hospital for treatment #CycloneOckhi pic.twitter.com/lB10HNPqsE
— ANI (@ANI) December 1, 2017
இதுவரை அநேக மீனவர்கள் ஒகி புயலிலிருந்து மீட்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.