எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடவுள்ளதாக நடிகை ஹெமமாலினி தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை ஹெமாமாலினி. வரும் மக்களவை தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவாரா என சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், வரும் தேர்தலிலும் மதுரா தொகுதியிலேயே போட்டியிட விரும்புவதாக ஹெமாமாலினி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மதுரா ரெயில் நிலையத்தில் புதியாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி, நவீன நடைமேம்பாலம், சூரிய மின்சக்தி திட்டம், மேம்படுத்தப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவற்றை துவங்கிவைக்கும் நிகழ்ச்சில் ஹெமாமாலின் பங்கேற்றார். இந்நிகிழ்ச்சியில் இதுகுறித்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., மதுரா ரெயில் நிலையம் நவீன மயமாக்கப்படும் என்று தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். இப்பணியில் ரெயில்வே அதிகாரிகள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார்கள்.
ஆன்மீக தளமான கருதப்படும் மதுராவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக மேலும் பல ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளேன். இதற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த தேர்தலில் பெற்றதை விட சிறப்பான வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.