இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கபட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்..!

Last Updated : Jun 21, 2020, 04:57 PM IST
இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கபட்டுள்ளது: ராஜ்நாத் சிங் title=

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்..!

லடாக் எல்லையில் சீனா இந்தியா மீது அத்துமீறினால் தாக்குதல் நடத்தியதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) அன்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி தாக்கியதில் சுமார் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அத்துடன், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுடைய பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 75 ஆம் ஆண்டு வெற்றி தினம் வரும் ஜூன் 24 ஆம் தேதி மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக நாளை மாஸ்கோ புறப்படுகிறார்.

READ | சீன-இந்திய எல்லையில் 2,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப இந்தியா திட்டம்...

அதற்கு முன்னதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது... ‛எல்லையில் இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,' என்றார்.

கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இந்திய மற்றும் சீனப் படைகள் ஆறு வார கால மோதலில் ஈடுபட்டுள்ளன. ஜூன் 15 ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலில் சீன இராணுவம் 20 இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றது மற்றும் 76 பேர் காயமடைந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளானன. இன்று 45-50 சீன துருப்புக்களும் கொல்லப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வன்முறை மோதல், ஜூன் 15-16 இடைப்பட்ட இரவில் கால்வான் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சென்றது.

Trending News