டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிமூட்டம்!!

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து மாசுக்கட்டுபாடனது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

Last Updated : Jan 12, 2018, 10:23 AM IST
டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிமூட்டம்!! title=

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Trending News