சிவன் சொத்து குல நாசம்! கேதாரீஸ்வரர் சும்மா விடமாட்டார்! வைரலாகும் வீடியோ

Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2023, 05:55 PM IST
  • கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது!
  • உத்தரகாண்டின் பிரபலமான சிவாலயம் கேதார்நாத் கோவில்
  • கோவில் கருவறையில் பொருத்தப்பட்ட தங்கத் தகடுகள் போலியானவையா?
சிவன் சொத்து குல நாசம்! கேதாரீஸ்வரர் சும்மா விடமாட்டார்! வைரலாகும் வீடியோ title=

கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ள தங்கம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. கேதார்நாத் கோயிலின் கருவறையில் பூசப்பட்ட தங்க அடுக்கு பித்தளையாக மாறியதாக அந்த கோவிலின் யாத்திரை பூசாரி குற்றம் சாட்டியுள்ளார். கோவில் கமிட்டியினர் தங்கத்தை சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கேதார்நாத் கோயிலின் தலைமை பூசாரி மற்றும் சார்தாம் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவரான சந்தோஷ் திரிவேதி, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கோயிலின் கருவறையில் இருந்த 1.25 பில்லியன் மதிப்புள்ள தங்கம் பித்தளையாக மாற்றப்பட்டதாக சந்தோஷ் திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார்.

கேதார்நாத் சிவன் கோவில் கருவறையில் தங்கத்திற்கு பதிலாக பித்தளை பயன்படுத்தப்பட்டதாக கேதார்நாத் கோயிலின் தலைமை பூசாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை

230 கிலோ தங்கம் திருட்டு
இந்த காணொளியில் கோவில் கமிட்டியினர் தங்கத்தை சோதனை செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேதார்நாத் கோவிலில் பொருத்தப்பட்ட 230 கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளதாக சந்தோஷ் திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார். உண்மையான தங்கத்திற்கு பதிலாக போலி தங்கம் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில் கமிட்டியினரின் கருத்து
அதே நேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் கேதார்நாத் கோவில் கமிட்டி, தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறுகிறது.

போலியான செய்திகளை பரப்புவதன் மூலம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் முயற்சி நடக்கிறது என்றும் கூறும் கோவில் கமிட்டியினர், இது தொடர்பாக முறையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கோவிலில் தங்கம் எவ்வளவு இருந்தது?
கேதார்நாத்தின் கருவறையில் 23,777.800 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கேதார்நாத் அறக்கட்டளை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி இதன் விலை 14.38 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய்

செப்பு தகடுகளில் தங்க முலாம் பூசி, அவை கருவறையில் பதிக்கப்பட்டுள்ளது. செப்புத் தகடுகளின் அசல் எடை 1,001.300 கிலோ மற்றும் விலை ரூ.29 லட்சம் என்று கேதார்நாத் அறக்கட்டளை குழு தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு கோரியுள்ளது.

புகழ்பெற்ற சார் தாம் கோயில்களில் ஒன்றான கேதார்நாத் கோவில் கருவறையில் தங்கத்தகடுகள் பொருத்தப்படுவதற்கு முன்னதாக,  2017-ம் ஆண்டு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டன.

230 கிலோ எடையில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி தகடுகளுக்கு பதிலாக தங்கத் தகடுகள் பொருத்திக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் முன்வந்தார். கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க தகடுகள் பொருத்த அவர் அரசிடம் அனுமதி பெற்று தங்க தகடுகளைப் பொருத்திக் கொடுத்தார்.கருவறையின் சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் தூண்களில் தங்க தகடுகள் பொருத்தப்பட்டன.

மேலும் படிக்க | இந்தியக் குழந்தை அரிஹாவை ஜெர்மன் அரசே வளர்க்கும்! பெற்றோர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News