இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி குருகிராமில் உள்ள பைனெஸ்ட்ஸ்ட் பள்ளி வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை பதிவு செய்தார்.
Haryana: Team India Captain Virat Kohli after casting his vote at a polling booth in Pinecrest School in Gurugram pic.twitter.com/z3vzJvxWSp
— ANI (@ANI) May 12, 2019
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மே 12) ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
இன்று (மே 12) உத்திரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், டில்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 1.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் டெல்லியில் மட்டும் 13,819 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்யைய வாக்குபதிவில் உ.பி. மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.