ex-cop ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த CBI

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது!!

Last Updated : May 26, 2019, 03:00 PM IST
ex-cop ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த CBI title=

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது!!

பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய மிகப்பெரிய அதிகார பலம் கொண்ட சிலரை காப்பதற்காக ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கோருவதாக ராஜீவ் குமாரின் வழக்கறிஞர் பலத்த ஆட்சேபம் எழுப்பியுள்ளார்.

மேலும், கைது நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த போது ராஜீவ் குமார் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரைக் கைது செய்ய 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. தடையை நீட்டிக்கக் கோரிய போது, அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை அடுத்து ராஜிவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையை சிபிஐ தொடங்கியுள்ளது.

அவர் வெளிநாடுகளுக்கு தப்பி விடக் கூடாது என்பதற்காக, லுக் அவுக் நோட்டீஸ் பிறப்பித்துள்ள சிபிஐ, அதை விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு முகமைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ராஜீவ் குமாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

 

Trending News