மானியமில்லாத சிலிண்டர் விலை கடும் உயர்வு! மக்கள் அதிர்ச்சி!

சென்னை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 12, 2020, 12:12 PM IST
மானியமில்லாத சிலிண்டர் விலை கடும் உயர்வு! மக்கள் அதிர்ச்சி! title=

சென்னை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக விலை உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

 

 

Trending News