கஸ்தூரி ஜாமீன்; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; ஏஆர் ரஹ்மான் விவகாரத்து; ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu Live :  ஏஆர் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா விவாகரத்து செய்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது உள்ளிட்ட மிக முக்கியமான செய்திகள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 21, 2024, 09:27 AM IST
    Tamilnadu News Live : ஏஆர் ரஹ்மான் விவாகரத்து, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் லைவ் அப்டேட்
Live Blog

Tamilnadu Live News Latest :  ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கலாம் என்றிருந்த சூழலில் மனைவியை பிரிவது துருதிஷ்டவசமானது என ஏஆர் ரஹ்மான் உருக்கமாக கூறியுள்ளார். இவர்களின் விவாகரத்து இந்திய சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாகியுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வரும் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதுதவிர இன்னும் மிக முக்கியமான செய்திகள் அப்டேட்டை நேரலையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

21 November, 2024

  • 17:36 PM

    இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் இன்று (நவ. 20) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News