மாகராஷ்டிரா: மேலும் ஒரு காவல்துறையினரை காவு வாங்கிய கொரோனா....மொத்தம் பலி 46

மறைந்த போலீசார் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

Last Updated : Jun 20, 2020, 02:19 PM IST
    1. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14,516 ஆக உள்ளது.
    2. கொரோனா வைரஸ் நோய்க்காக மொத்தம் 66,16,496 மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிசோதித்துள்ளது.
    3. மறைந்த போலீசார் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
மாகராஷ்டிரா: மேலும் ஒரு காவல்துறையினரை காவு வாங்கிய கொரோனா....மொத்தம் பலி 46

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று மும்பையில் மற்றொரு போலீஸ்காரரின் உயிரைப் பறித்தது, இதனால் மகாராஷ்டிரா முழுவதும் தொற்று காரணமாக இறக்கும் மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கையை 46 ஆக உயர்த்தியதாக மும்பை காவல்துறை புரோ பிரணே அசோக் சனிக்கிழமை தெரிவித்தார்.

மறைந்த போலீசார் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மும்பை காவல்துறையில் மொத்தம் 2,349 போலீஸ்காரர்களில் கொரோனா வைரஸ் நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டதில், 31 பேர் இதுவரை இந்த ஆபத்தான வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

 

READ | கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்க மெகா திட்டம் அறிமுகம்!

 

உலகளாவிய அளவில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது, அமெரிக்காவில் அதிகமாக 2,219,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக இறப்பு எண்ணிக்கை 4.59 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

கடந்த  24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14,516 ஆக உள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள்மொத்த  எண்ணிக்கை 12,948 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்காக மொத்தம் 66,16,496 மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிசோதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,89,869 மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

More Stories

Trending News