2019 தேர்தலிலும் மோடி வெற்றிபெற வேண்டும் -கங்கனா ரணாவத்!!

பிரதமர் நரேந்திர மோடி தான் ஜனநாயகத்திற்கு ஏற்ற சரியான தலைவர் என்று புகழாரம் சூட்டிய நடிகை கங்கனா ரணாவத் பேட்டி! 

Updated: Jul 29, 2018, 01:47 PM IST
2019 தேர்தலிலும் மோடி வெற்றிபெற வேண்டும் -கங்கனா ரணாவத்!!

பிரதமர் நரேந்திர மோடி தான் ஜனநாயகத்திற்கு ஏற்ற சரியான தலைவர் என்று புகழாரம் சூட்டிய நடிகை கங்கனா ரணாவத் பேட்டி! 

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தலையை காண்பித்து விட்டு பாலிவுட்டில் பிஸியான நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார்.

தமிழில் ஒரு படத்தில் மட்டும் நடித்தாலும் தமிழகத்தில் ரசிகர்கள் பலரை கொண்டவர் கங்கனா. இவர் தற்போது ஆன்மிக பயணத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
அப்போது அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் சிறந்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அதல பாதாளத்தில் வீழ்ந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்ல 5 ஆண்டுகள் பிரதமர் மோடிக்கு போதாது என்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மோடி பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார். 

மேலும், அவர் பேசுகையில்... நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் என்றும், சிலரைப் போல தங்களின் குடும்பப் பின்னணி மூலம் அரசியலுக்கு அவர் வளரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் நிலவும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர, சிந்தித்து செயல்படுபவர் அவர். அடுத்த தேர்தலிலும், மோடி வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராகி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கங்கனா விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நேரம் வரும்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் ஈடுபடுவேன் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!