நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நாதுராம் கோட்சே’ விவகாரத்தில் தற்போது புதியதொரு திருப்பமாக ஒட்டுமொத்த பாஜக-வினையும் ராகுல் சீன்டியுள்ளார்!
மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே-வை தீவிரவாதி இல்லை என சில பாஜக தலைவர்கள் தெரிவிக்க., அதற்கு எதிர்ப்புகளும் நிகராக எழுந்த நிலையில் கோட்சே குறித்த கருத்துகளை பாஜக-வினர் பின்வாங்கி கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி., "இறுதியாக நான் அறிந்துக்கொண்டேன்., இந்த பாஜக-வினர் மற்றும் RSS பக்தர்கள் உண்மையில் கடவுள் விரும்பிகள் அல்ல., கோட்சே விரும்பிகள்" என பதிவிட்டுள்ளார்.
I finally got it. The BJP and the RSS...
Are not God-Ke Lovers.
They are God-Se Lovers.
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2019
முன்னதாக கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.
இது பெரும் விவாததுக்கு உள்ளானது. பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கமலில் கருத்துக்கு பிரதமர் மோடி உட்பட பாஜக அரசியல் தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வந்தனர்.
இதற்கிடையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் வேட்பாளரான பிரக்யா சிங் "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என தெரிவித்தார். பின்னர் தனது கட்சியிலேயே எழுத்த எதிர்ப்பினை அடுத்து தனது கருத்தினை பின்வாங்கி கொண்டார்.
தற்போது பாஜக-வினர் கோட்சே குறித்து கருத்துகளை பின்வாங்கிய போதிலும், ஆரம்பத்தில் கோட்சேவை தீவிரவாதி இல்லை என தெரிவித்தமையால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.