நடப்பு நிதியாண்டில் ரெயில் டிக்கெட் வருமானம் உயர்வு..!

ரெயில் டிக்கெட் வருமானம் கிடு கிடு என உயர்வு; ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!

Last Updated : Apr 4, 2018, 06:22 AM IST
நடப்பு நிதியாண்டில் ரெயில் டிக்கெட் வருமானம் உயர்வு..!  title=

பேருந்து கட்டணம் உயர்வால் மக்கள் ரயில் பயணத்தை நாடினர். நாடு முழுவதும் மக்கள் இடையே ரெயில் பயணத்துக்கு ஆதரவு பெருகி வருவதாக ரெயில்வே துறை வெளியிட்டு உள்ள புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

2017-18 நிதி ஆண்டில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி. கடந்த 2016-17 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ.2 ஆயிரத்து 551 கோடி அதிகமாக உள்ளது.

இதை தொடர்ந்து தற்போது ரெயில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் டிக்கெட் வருமானம் பெருகி உள்ளது. புறநகர் ரெயில் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்து உள்ளது.அதுமட்டுமின்றி இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவும் 6.3 சதவீதமாகபெருகி உள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது.

கடந்த 2016-17 நிதி ஆண்டில் ரெயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 8219.38 மில்லியன் ஆகும். நடப்பு ஆண்டான 2017-18 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 8267.32 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ரெயில் டிக்கெட்டுகளுக்கு இணையாக சில விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை குறைத்து, நிர்ணயித்து இருந்தபோதும் ரெயில் பயணிகள் டிக்கெட் வருமானமும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 

Trending News