Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?

Rajasthan Election Results 2023 Live: காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2023, 09:21 AM IST
  • ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் 2023.
  • காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்?
  • முதல்வராகக்கூடும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு? title=

ராஜஸ்தான் தேர்தல் 2023: ராஜஸ்தானின் தேர்தல் போரில், ஆட்சி மாறுமா அல்லது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்குமா? இந்த கேள்விக்கு இன்று மாலைக்குள் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வியாழனன்று வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 96 இடங்களும், பாஜக -வுக்கு 90 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. முதல்வர் அசோக் கெலாட்டின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும், காங்கிரஸ் அசோக் கெலாட்டை முதல்வராக அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகக்கூடும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அசோக் கெலாட் (Ashok Gehlot)

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் ஒரு வலுவான போட்டியாளராக இருப்பார். ஏனெனில் அவரது திட்டங்களின் அடிப்படையில்தான் காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கி வலுவாகப் போராடியது. அசோக் கெலாட் 1998 முதல் 2003, 2008 முதல் 2013 மற்றும் 2018 முதல் 2023 வரை முதலமைச்சராக இருந்துள்ளார். இது தவிர மத்திய அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், தேசிய பொதுச்செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். அவர் அரசியலின் மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார். மேலும் கெஹ்லோடின் மனதில் என்ன திட்டம் ஓடுகிறது என்பதை யாரும் கணிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அவர் வலது கை என்ன செய்யப்போகிறது என்பது அவரது இடது கைக்கே கூட தெரியாது என்று விளையாட்டாக அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதூண்டு. 

சச்சின் பைலட் (Sachin Pilot)

ராஜஸ்தான் காங்கிரஸில் இரண்டாவது பெரிய பெயர் சச்சின் பைலட். சச்சின் பைலட் 2018 ஆம் ஆண்டிலும் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக இருந்தார், இருப்பினும் அவர் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. குறைந்த வயதில் எம்பி ஆன சாதனையையும் பைலட் படைத்துள்ளார். இது தவிர, 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற அவமானகரமான தோல்விக்குப் பிறகு கட்சியையும் அமைப்பையும் மீண்டும் வலிவாக்கி வழி நடத்திச்சென்றதில் சச்சின் பைலடுக்கு பெரும் பங்குள்ளது. சச்சின் பைலட் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மிகவும் நம்பகமானவராகவும் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க | Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு? சிறிது நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

கோவிந்த் சிங் தோதசரா (Govind Singh Dotasra)

கோவிந்த் சிங் தொட்டசரா கல்வி அமைச்சராக இருந்தாலும் அவர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இருந்தவர். அதன் பிறகு அவர் மாநிலத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார். கெலாட் மற்றும் பைலட் இடையே ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பிறகு அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஜாட் சமூகத்தில் இருந்து வரும் தொட்டசராவும் முதல்வர் பதவிக்கான ஒரு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார்.

சிபி ஜோஷி (CP Joshi)

ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷியும் மாநில அரசியலில் சிறப்புப் பங்கு வகிக்கிறார். 2008 சட்டசபை தேர்தலில், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக ஜோஷி கருதப்பட்டார், ஆனால் அவர் தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும், சிபி ஜோஷியும் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக உள்ளார்.

கோவிந்த் ராம் மேக்வால் (Govind Ram Meghwal)

ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசில் அமைச்சராக இருந்த கோவிந்த் ராம் மேக்வாலை பிரச்சாரக் குழுத் தலைவராக காங்கிரஸ் நியமித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தலித் சமூகத்தைச் சேர்ந்த மேக்வாலுக்கு சமீபகாலமாக கட்சி மற்றும் அமைப்பில் பல முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பஞ்சாப்பைப் போலவே, கோவிந்த் ராம் மேக்வால் வடிவத்தில் காங்கிரஸிடம் ஒரு பெரிய தலித் கார்ட் உள்ளது என்றும், அவரை மாநில காங்கிரஸ் கட்சி சாதுர்யமான வழியில் பயன்படுத்தும் என்றும் சில அரசியல் பண்டிதர்கள் கூறுகிறார்கள். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவருக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | Chhattisgarh Assembly Election Result 2023: யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? முக்கியமான 10 முகங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News