ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு: முகேஷ் அம்பானி

ஜியோ சிம்மின் இலவச சேவைகள் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 1, 2016, 03:00 PM IST
ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு: முகேஷ் அம்பானி title=

புதுடெல்லி: ஜியோ சிம்மின் இலவச சேவைகள் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி வரை, அனைத்து வகையான வாய்ஸ் கால்கள், இண்டர்நெட் சேவைகள் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ இன்று அறிவித்தது.

டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு புதிய ஜியோ வாடிக்கையாளருக்கும் ஜியோ டேட்டா, வாட்ஸ், வீடியோ, ஆப்ஸ் என அனைத்து சேவைகளும் 2017 மார்ச் 31ம் தேதி வரை இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக், வாட்ஸ்-அப், ஸ்கைப் விட ஜியோ மிக வேகமாக வளர்ந்து, உலகின் வேகமான டெக் நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக கூறினார். 'உள்நாட்டு அழைப்புகள் எப்போதும் இலவசம்தான். ஒவ்வொரு நாளும் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ 4ஜியில் சேர்கிறார்கள்' என்று கூறினார்.

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே உள்ள 5.2 கோடி  வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவை வரும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் வீட்டிலேயே வந்து ஜியோ சிம் வழங்கும் சேவை துவங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-ன் முக்கிய அம்சங்கள்:-

* 4ஜி சேவையில், 1ஜிபிக்கு ரூ.50 கட்டணம்.

* ரூ 149 திட்டத்தின் கீழ், இலவச வாய்ஸ் கால் (லோக்கல் மற்றும் எஸ்.டீ.டி), ரோமிங் கட்டணம் ரத்து, 100 எஸ்எம்எஸ் மேலும் 0.3ஜிபி டேட்டா வழங்கப்படும்.

* ரூ. 4,999 திட்டத்தின் கீழ், 75ஜிபி டேட்டா அத்துடன் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் இரவு டேட்டா வழங்கப்படுகிறது.

* மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்.

* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வை-பை வசதி

Trending News