புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடை முறை நாடெங்கும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. இன்று இரண்டாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு 4000 ரூபாய் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது. இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர். மேலும் இன்று முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வெறும் 10 சதவீத ஏடி.எம் கள் மட்டுமே திறந்து இருந்தன. திறந்து இருந்த பெரும்பாலான ஏடி.எம் களிலும் பணம் காலியானதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அவதி படுகின்றனர்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த அறிக்கையில், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் போதிய அளவில் வங்கிகளிடம் உள்ளன. பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். நாடு முழுவதும் புதிய ரூபாய் தாள்கள் சேர்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஏடிஎம் செயல்படும் என்று, அதில் பணம் எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம், 100 ரூபாய் நோட்டுகள் தான் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நவம்பர் 19-ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய், 4000 ரூபாயாக அதிகரிக்கும்.
Enough Cash is Available, RBI reassures; urges Public to exercise Patience and Exchange Notes at Conveniencehttps://t.co/gbCaSorPtb
— ReserveBankOfIndia (@RBI) November 11, 2016