தாண்டேவாடா அரான்பூரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு.....
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய பாதுகாப்புடைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற இரண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
#UPDATE Two security personnel have also lost their lives in the attack by Naxals in Dantewada's Aranpur #Chhattisgarh https://t.co/VbvIfLHkFn
— ANI (@ANI) October 30, 2018
இந்த தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து, பாதுகாப்புபடையினர் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Dantewada Naxal attack: Two security personnel who were injured brought to hospital. Two security personnel and a DD cameraman lost their lives in the attack. #Chhattisgarh pic.twitter.com/ZiqbwiNbNs
— ANI (@ANI) October 30, 2018
Chhattisgarh Police personnel Rudrapratap, who lost his life today in #Dantewada Naxal attack. #Chhattisgarh. Two security personnel and a DD cameraman lost their lives in #Dantewada Naxal attack pic.twitter.com/o45GSZAuBV
— ANI (@ANI) October 30, 2018
கடந்த மூன்று தினங்களுக்கு முன், பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது. 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில், வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.