Vaccine Discount: தடுப்பூசி போட்டாச்சா? பிடிங்க 50% தள்ளுபடியை!

ஹரியானா மாநிலம், குருகிராம் நகரில் உணவு விடுதிகள், பப்கள் மற்றும் பார்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2021, 09:33 AM IST
  • தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி
  • ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 25% தள்ளுபடி
  • சுகாதார பணியாளர்களுக்கு சிறப்புச் சலுகை
Vaccine Discount: தடுப்பூசி போட்டாச்சா? பிடிங்க 50% தள்ளுபடியை! title=

கடந்த ஆண்டு உலகை தாக்கத் தொடங்கிய கொரோனா சற்றே பின்வாங்கி, தற்போது இரண்டாவது அலையால் சூறையாடியது. கொரோனாவின் 2வது அலை, அதன் முதல் அலையைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையின்போது தடுப்பூசிகளே இல்லாமல் தள்ளாடிய உலகம், இரண்டாம் அலையில் தடுப்பூசி என்ற ஆயுதத்தோடு கொரோனாவை எதிர்கொள்கிறது.

உலகம் முழுவது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.இந்தியாவில் தொடக்கத்தில் மெத்தனமாக இருந்த மக்கள், தற்போது தடுப்பூசி போட வரிசை கட்டி நிற்கின்றனர். மக்களை தடுப்பூசி போடுவதற்கு ஊக்குவிப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. 

Also Read | இந்தியாவில் 27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது

ஹரியானா மாநிலம், குட்காவ் எனப்படும் குருகிராம் நகரில் உள்ள உணவு விடுதிகள், பப்கள் மற்றும் பார்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறல்லாம். ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 25% தள்ளுபடி பெறலாம்.

இதுபோன்ற சிறப்பு தள்ளுபடிகள், மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஊக்கத்தை வழங்குகிறது. அத்துடன், வணிகமும் அதிகரிக்கிறது. அதேபோல, நகரின் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வணிக வளாகம் ஒன்று வழங்குகிறது.

Read Also | Corona Third Wave: 8 வாரங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில்!

முன்கள சுகாதார பணியாளர்களை பாராட்டும் வகையில், இலவச கார் நிறுத்தும் சேவைகள் மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் ஆகியவற்றை அந்த வணிக வளாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டி, சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா வாரியர்ஸ் என்னும் முன்களப் பணியாளர்கள், இந்த தீவிரமான நோய்த்தொற்றுக் காலத்தில் செய்யும் பணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஊக்க நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டுகின்றனர்.  

Also Read | Corona: காற்றுக்கு பிறகு நீரிலும் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News