கஷ்மீரில் பனிக் கட்டிகளால் ஆன உலகின் மிகப்பெரிய ‘Igloo Cafe’!

உலகின் மிகப்பெரிய பனியினால் ஆன Igloo Cafe ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் மையமாக மாறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2022, 06:11 PM IST
  • பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளாகும்.
  • இக்ளூ கட்டும் பணியில், 25 பேர் இரவும் பகலும் வேலை செய்தனர்.
கஷ்மீரில் பனிக் கட்டிகளால் ஆன உலகின் மிகப்பெரிய ‘Igloo Cafe’! title=

பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். இவை பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் பனிகட்டிகள் ஒன்றோடொன்று வலுவாக இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக்கட்டிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இக்லூக்களின் உட்பகுதி இதமானதாக இருக்கும்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட  Igloo Cafe, அந்த யூனியன் பிரதேசத்தில் புதிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டில் ‘Snowglu’ என்ற பெயரிடப்பட்ட  இந்த உணவகம் 37.5 அடி உயரமும் 44.5 அடி விட்டமும் கொண்டது. 

ALSO READ | கோவிட் பரவாமல் தடுக்க இப்படியும் வழி இருக்கு! மாத்தி யோசிக்கும் டோக்கியோ ஹோட்டல்

Igloo Cafe உணவகத்தை உருவாக்கிய சையத் வாசிம் ஷா, இது உலகின் மிகப்பெரிய கஃபே என்று கூறினார். "சில ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் இது போன்ற ஒரு உணவகத்தை பார்த்தேன். அங்கு தூங்கும் வசதிகளுடன் கூடிய அத்தகைய ஹோட்டல்களைக் காணலாம். மிக அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் குல்மார்க் பகுதியில், சுவிட்சர்லாந்தைப் போல் ஏன் தொடங்கக்கூடாது என்று எண்ணியதாக  ஷா கூறினார்.

கடந்த ஆண்டும் இதே போன்று இக்லூ கஃபே ஒன்றை உருவாக்கியதாகவும், இது ஆசியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறினார்.  "இந்த ஆண்டு, நான் உலகின் மிக உயர்ந்த கபேயை உருவாக்கினேன் என்றார்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி மிகப்பெரிய இக்லூ கஃபே சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், அதன் உயரம் 33.8 அடி மற்றும் விட்டம் 42.4 அடி என்றும் அவர் கூறினார். "எனவே, இப்போது நான் அமைத்துள்ளது, அதை விட பெரியது," ஷா மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஓட்டலில் நான்கு டேபிள்கள் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் 16 பேர் மட்டுமே சாப்பிடலாம் என்றும், ஆனால் இந்த ஆண்டு 10 டேபிள்களை அமைத்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் நாற்பது பேர் என்றும் அவர் கூறினார்.

ALSO READ | Number 13: எண் ‘13’ என்றாலே அஞ்சும் உலகம்; காரணம் என்ன!

இக்ளூ கட்டும் பணியில், 25 பேர் இரவும் பகலும் வேலை செய்து, 64 நாட்கள் ஆனது எனவும் திட்டத்தை முடிக்க 1,700 மனித நாட்கள் தேவை என்று ஷா கூறினார்.

“பனியினால் ஆன இந்த இக்ளூன் ஐந்தடி தடிமன் கொண்டது. இது மார்ச் 15 வரை நீடிக்கும் என்று நம்புகிறோம் ”என்று அவர் கூறினார். உள்ளூர் மக்கள் மற்றும் ரிசார்ட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு மையமாக இந்த கஃபே மாறியுள்ளது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News