Google தளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் ஆனார் யோகி!

தேடல் வலைதளமான கூகிள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யதாத் முதல் இடம் பிடித்துள்ளார்.

Last Updated : Oct 27, 2018, 10:19 AM IST
Google தளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் ஆனார் யோகி! title=

தேடல் வலைதளமான கூகிள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யதாத் முதல் இடம் பிடித்துள்ளார்.

பிரபல தேடுபொறி வலைதளமான கூகிள் சமீபத்தில் தனது வலைதளத்தில் அதிக தேடப்பட்டவர்கள் பட்டியலினை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிகமாக தேடப்பட்ட முதல்வர் பட்டியலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றவுள்ளதாக உபி முதல்வர் அறிவித்தார. இதனையடுத்து யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வைத்து நெட்டீசன்கள் மீம்ஸ் திருவிழா நடத்தி வந்தனர். இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்த இவரது புகைப்படங்களை பார்த்து யார் இந்த யோகி என நாடு முழுவதிலும் தேட துவங்கினர் நெட்டீசன்கள்... இதனையடுத்து யோகி உலக அளவில் பேமஸ் ஆனார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்பது புரணாங்களில் குறிப்பிடப்படும் பிரசிதிப்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். அலகாபாத்தை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்துவந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவின் போது பெயரை மாற்றப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து யோகி ஆதித்யநாத் உலக பிரபலங்கள் பலருக்கும் பெயரினை மாற்றி வைப்பது போல் இணையத்தில் நெட்டீஸன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூகிள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் யோகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!

Trending News