மு. கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் விழாவை புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறியுள்ளார்.

Last Updated : Aug 2, 2021, 01:16 PM IST
மு. கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் விழாவுக்காக தமிழகமே களைகட்டியுள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழகத்தில் நடக்கவுள்ள பலவித விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ram Nath Kovind) இன்று தமிழகம் வந்துள்ளார். இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் நாளை காலை கோவைக்கு செல்கிறார். இன்று சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்ள் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

தமிழக சட்டப்பேரவையின் 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நடக்கவுள்ள நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார். தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார். 

ALSO READ: சட்டசபை நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் இந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக (AIADMK) அமைச்சர் ஜெயக்குமார் குறியுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றியமைத்து விழா கொண்டாடுவதாக குற்றம் சாட்டியிள்ளார். 

இதற்கிடையில், சட்டப்பேரவையில் நடக்கவுள்ள விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ALSO READ: கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: PMK

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News