அலஸ்கா-வை சேர்ந்த இளைஞர், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!
அலஸ்காவின் ஸ்வோர்ட் பகுதியை சேர்ந்தவர் Kyle Pierce. இவர் தனது காதலியான Jenna Eller இடம் தனது காதலை தெரிவிக்க வித்தாயசமான தருணத்தினை தேர்வு செய்துள்ளார். Jenna Eller சிறந்த கையுந்துபந்து ஆட்டக்காரர், எனவே அவரது கல்லூரியில் கையுந்துபந்து போட்டி நடைப்பெற்ற போது, போட்டிக்கு இடையில் தனது காதலை தெரிவிக்க முடிவுசெய்துள்ளார்.
அதன்படி கடந்த அக்டோபர் 30-ஆம் நாள் Concordia University-ல் நடைப்பெற்ற கையுந்துபந்து போட்டிக்கு இடையில் Kyle Pierce தனது காதலை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினை படம்பிடித்து அவர் தனது முகப்புத்தகத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் Jenna Eller கையுந்து பந்திற்காக காத்திருக்கின்றார்., அப்போது எதிர்வரும் பந்தை நோக்கி அவர் செல்ல தவறி தறையில் விழுகின்றார். இத்தருணத்தில் Kyle Pierce கையில் மற்றொரு பந்துடன் வந்து Jenna Eller இடம் தருகின்றார். இந்த பந்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு Jenna Eller எழுதியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத Jenna Eller மகிழ்ச்சி கடலில் மூழ்குகின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.