தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டி காரணமாக, வாடிக்கையாளர்களை ஈர்க்க. Vi, Jio, Airtel மற்றும் BSNL என அனைத்து நிறுவனங்களும், போட்டி போட்டுக் கொண்டு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. ₹ 46, ₹109 மற்றும் ₹169 என்ற அளவில் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களை பெறலாம்.
வோடபோன் ஐடியாவின் ₹ 46, ₹109 மற்றும் ₹169 என்ற அளவிலான் ரீசார்ஜ் திட்டம்.
இதில் ₹109 ப்ளான் 20 நாள் செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு () என்பதுடன் கூடவே 1 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக, உங்களுக்கு Zee5 க்கான சந்தாவும், வோடபோன் ப்ளே செயலியையும் இலவசமாக பயன்படுத்தலாம். அதன் இரண்டாவது திட்டம் ₹169 க்கான ரீசார்ஜ் ப்ளான், இதில் 20 நாட்களுக்கான வரம்பற்ற அழைப்புடன், தினசரி 1 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதனுடன், வோடபோன் ப்ளே மற்றும் Zee5 இலவச சந்தாக்களும் அடங்கும் . இந்நிறுவனம் ₹46 ரூபாய் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு ஒரு வினாடிக்கு, 0.25 பைசா என்ற அளவில் கட்டணம் இருக்கும். உள்ளூரில், வோடபோன் எண்ணிலிருந்து வோடபோன் எண்ணை அழைப்பதற்கு 100 இரவு நிமிடங்கள் கிடைக்கின்றன. காலை 11 மணி முதல் காலை 6 மணி வரை, அழைக்க இலவச இரவு நிமிடங்களைப் பயன்படுத்தலாம். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் ப்ளான்.
ALSO READ | NPS: கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க, மாதம் ₹27,000 தரும் சூப்பர் பென்ஷன் திட்டம்
ஏர்டெல்லின் 129 மற்றும் 199 ரூபாய்கான ரீசார்ஜ்
₹129 மற்றும் ₹199 என இரண்டு மலிவான சூப்பர் ப்ளான்கள் உள்ளது. ரூ.129 ரீசார்ஜ் பளானில் 300 எஸ்எம்எஸ், 1 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை உண்டு. இது 24 நாள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் உங்களுக்கு Airtel Xstream, Wynk Music, மற்றும் Zee5 Premium ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்கள் அடங்கும். ₹ 199 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும், தினசரி 1 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ், Airtel Xstream, Wynk Music, மற்றும் Zee5 Premium ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்கள் அடங்கும்.
ஜியோவின் ₹149 ரீசார்ஜ்
ஜியோவின் ₹149 திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும், தினசரி 1 ஜிபி டேட்டா, ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளில் அழைப்புகளுக்கு 300 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. உங்கள் தினசரி தரவு காலியான பிறகு, இணையத்தின் வேகம் 64Kbps ஆகக் குறையும். இந்த திட்டத்தில், ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.
ALSO READ | 7th Pay Commission: ஜூலை மாதம் முதல் தேதி முதல் 28% வரை சம்பள உயர்வு
BSNL ₹98 ரீசார்ஜ் ப்ளான்
பிஎஸ்என்எல்லின் ₹98 திட்டத்தில் தினசரி 2 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்பு வசதி உண்டு. இது 24 நாள் செல்லுபடியாகும். இது தவிர, Eros Now இலவச சந்தா மற்றும் இலவச பர்சனல் ரிங் பேக் டோனும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR