ராகு கேது பெயர்ச்சி 2022: ஏப்ரல் 2022 மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் மற்ற கிரகங்களுடன், சனி மற்றும் ராகு-கேது போன்ற கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ஏப்ரல் 12ம் தேதி ராகு ராசி மாறி மேஷ ராசிக்கு பிரவேசித்தார். கேது துலா ராசியில் பிரவேசித்துள்ளார்.
இந்த இரண்டு கோள்களும் எப்போதும் பின்னோக்கி அதாவது தலைகீழாக நகரும். ராகு-கேதுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் உருவாகும்.
குறிப்பாக, மூன்று ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் இந்த ராசி மாற்றம் மிகவும் நல்ல, வளமான பலன்களை அளிக்கவுள்ளது. ராகு கேதுவின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் மிகவும் நல்லதாக இருக்கும். அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி வேகமாக முன்னேறுவீர்கள். இந்த காலத்தில் சற்று கவனமாக இருங்கள். யாருடனும் தகராறு செய்யாமல் இருப்பது மிக அவசியம்.
பேச்சில் கவனம் தேவை. நிதானமாக பழகுங்கள். பணியிடத்தில் ஊதியம் அதிகரிக்கும். வேறு வழிகளிலும் பணம் வந்து சேரும். இந்த காலத்தில் பணம் நன்றாக சேரும். சேமிப்பில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் முதலீடு செய்வது நல்லது. இப்போது முதலீசு செய்யப்படும் பணம் நல்ல லாபத்தை அளிக்கும்.
ரிஷபம்:
ராகு-கேதுவின் பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலுக்கு அதிக பலன்களைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பதவி உயர்வு வரக்கூடும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். இதன் மூலம் நல்ல ஆதாயமும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
இந்த நேரம் துலா ராசியினருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும், மரியாதையையும் தரும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். இது சம்பாத்தியம் கூடும் நேரம். பண வரவு நன்றாக இருக்கும். தற்போது உங்களுக்கு நேரம் சாதகமாக இருப்பதால், பணம் ஈட்ட புதிய வழிகளை முயற்சி செய்யலாம். உங்கள் இலக்குகளை நோக்கி செல்வதில் நீங்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.
மேலும் படிக்க | Zodiac Nature: மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்போம் கொள்கை கொண்ட 3 ராசிகள்
மிதுனம்:
ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை அலட்சியம் செய்தால் சிரமங்கள் ஏற்படும்.
பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்களின் மூலம் பல நன்மைகள் ஏற்படும். வேலை அல்லது வசிக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம். பல சாதனைகளை செய்து முடிப்பீர்கள். இந்த மாற்றத்தால் பல நன்மைகளே கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Astro: சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR