குறைந்த வட்டியில் வீடு மற்றும் வாகனக் கடன்களை வழங்கும் Bank of Maharashtra

வீட்டுக் கடன், வாகனக் கடன்களை குறைந்த விலையில் வாங்கிப் பயனடையலாம். பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா சிறந்த சலுகைகளை வழங்குகிறது, வட்டி விகிதங்கள் என்ன? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 08:50 AM IST
  • கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தன
  • இனி வீட்டுக் கடனுக்கான வட்டி 6.50%
  • கார்ப்பரேட்கள் கடன் வாங்குவது குறைந்தது
குறைந்த வட்டியில் வீடு மற்றும் வாகனக் கடன்களை வழங்கும் Bank of Maharashtra title=

புதுடெல்லி: பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

புத்தாண்டு தொடங்கும் முன்பே, சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா அருமையான பரிசை வழங்கியுள்ளது. வங்கி வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்துள்ளது. 

இதுவரை வீட்டுக் கடனுக்கான குறைந்த விகிதம் 6.5% ஆக இருந்தது, ஆனால் மகாராஷ்டிராவின் அரசுத் துறை வங்கியான Bank of Maharashtra குறைந்த வட்டி விகிதத்தில் அதாவது 6.4 சதவீதத்தில் வீட்டுக் கடனை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

READ ALSO | வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம், விகிதங்களில் இல்லை மாற்றம்

பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வட்டி விகிதங்கள் விழாக்காலத்தை முன்னிட்டு, டிசம்பர் 13 முதல் குறைக்கப்பட்டது.  வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கியில் வாகன கடன் (Auto Loan) விகிதங்களும் 7.05 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கியின் CASA வைப்புத்தொகை 54 சதவீதத்தை எட்டியதாலும், சில்லறைக் கடன்களில் அதிக கவனம் செலுத்துவதாலும் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

சிறந்த கிரெடிட் ஸ்கோரைக் (customer credit score) கொண்ட வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விகிதத்தில் சில்லறைக் கடன்களை எளிதாகப் பெறுவார்கள். அதாவது 'சில்லறை பொனான்சா - பண்டிகை தமாகாவில்' ('Retail Bonanza-Festive Explosion') வழங்கப்படும் வட்டி விகிதங்கள் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.

READ ALSO | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு

வட்டி 6.5%
அக்டோபரில், தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) உட்பட பல பொது மற்றும் தனியார் வங்கிகள் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் தொடர்பான விழாக்கால சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தின. வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதங்கள் 6.50 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டன.   

வட்டி விகிதம் குறைந்தது ஏன்?
கார்ப்பரேட் கடன்களின் தேவை இல்லாததால், வங்கிகளின் கவனம் இப்போது சில்லறை கடன்களை நோக்கியே உள்ளது. அதனால்தான் வட்டியை குறைக்கின்றன. 

ALSO READ | YONO SBI App செயலி மூலமாக முன்னரே அங்கீகரிக்கப்பட்ட கடன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News