என் மகள் என்னை மனிதானாக மாற்றியுள்ளார்: தோனி!

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன் தோனியின் மகளும் இந்த சீசனில் பெரும் பிரபலமானார். மைதானத்தில் தந்தை தோனியுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என ரசிகர்களிடையே பகிரப்பட்டது.

Updated: Jun 13, 2018, 09:21 AM IST
என் மகள் என்னை மனிதானாக மாற்றியுள்ளார்: தோனி!
Twitter@ZivaSinghDhoni

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன் தோனியின் மகளும் இந்த சீசனில் பெரும் பிரபலமானார். மைதானத்தில் தந்தை தோனியுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என ரசிகர்களிடையே பகிரப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி தனது மகள் ஜிவாவை பற்றி நெகிழ்ச்சியான சில தருணங்கள் கூறினார். அதில்,

என் மகள் ஜிவா என்னை மனிதானாக மாற்றியுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக ஆரம்பித்த எனது வாழ்க்கை தந்தை என்ற நிலையை அடையும் வரை எந்தவிதமான வித்யாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜிவா எனது முதுகெலும்பாக இருக்கிறாள் என்பதை நான் உணர்கிறேன். 

வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன். ஜிவா பிறக்கும் போது நான் அருகில் இல்லை, அப்போது நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இருந்தேன். ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக நெருக்கமாக இருப்பது இயல்புதான். அதே போன்று தான் என் மகளும் உள்ளார். அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜிவா எனது முதுகெலும்பாக மாறி வருகிறாள்.

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஜிவா பங்கேற்றாள். அப்போது மைதானத்திற்கு போக வேண்டும், அங்குள்ள புல்வெளிகளில் விளையாட வேண்டுமென்பது ஜிவாவின் மிகப்பெரிய ஆசை. மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழைந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. 

நான் பிற்பகல் 1.30 அல்லது 3 மணியளவில் எழுந்திருப்பேன். ஜிவா காலையில் 8.30 மணிக்கு எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்று விடுவாள். ஜிவா எந்தளவிற்கு கிரிக்கெட்டை புரிந்து வைத்துள்ளார், அதனை பின்பற்றுகிறாள் என்று தெரிய வில்லை. ஆனால் ஒரு நாள் நான் விளையாடும் போட்டிக்கு அவளை அழைத்து வருவேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதிலளிப்பாள். 

இவ்வாறு கூறியிருந்தார்.