7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்காக ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். ஊழியர்களின் அகவிலைப்படி 3 அல்லது 4 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயரும். அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும். இதற்கிடையில் ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள பணவீக்கக் குறியீட்டில் மிகப்பெரிய அதிகரிப்பு காணப்படுகிறது. ஜூலை 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டில் 3.3 புள்ளிகள் என்ற அளவில் பெரிய முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜூலை மாதத்திற்கான AICPI குறியீடு 3.3 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஜூன் 2023 இல் 136.4 புள்ளிகளாக இருந்த இந்த குறியீடு தற்போது 139.7 புள்ளிகளாக உள்ளது. இதன் பிறகு அகவிலைப்படியின் மதிப்பெண் 47.14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இது அமலுக்கு வராது என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பை நிரணயிக்கப்படுகின்றன. ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் டிஏ அதிகரிப்புக்கும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் ஜனவரி முதலான அகவிலைப்படி அதிகரிப்புக்கும் அடிப்படையாக அமைகின்றன.
ஜூன் மாதத்தில் அகவிலைப்படியின் மதிப்பெண் 46.24 சதவீதமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை தங்களின் அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது நடந்தால், அவர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் இந்த அளவு உயர்வு இருக்கும் (46% டிஏ உயர்வு)
சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 18,000)
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ.8280/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 8280-7560= ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640
அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 56,900)
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ 26,174/மாதம்
3. இதுவரை அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 26,174-23,898= ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12 = ரூ 27312
வீட்டு வாடகை கொடுப்பனவில் ஏற்றம்
அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அதிகரிக்கும் என மத்திய ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு உழியர்கள் நீண்ட காலமாக எஹ்ஆர்ஏ அதிகரிப்புக்காக காத்திருக்கின்றனர். ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், டிஏ -வுக்குப் பிறகு எச்ஆர்ஏ அதிகரிக்கும். இருப்பினும், அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் போது இந்த அதிகரிப்பு ஏற்படும். அதற்கு இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். தற்போது, நகரங்களின் வகையின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எக்ஸ், ஒய், இசட் என்று பெயரிடப்பட்டுள்ளது. X நகரில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக HRA கிடைக்கும். ஒய் மற்றும் இசட் நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு அவர்களை விட குறைவான HRA கிடைக்கும். நகரத்தைப் பொறுத்து, 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் எச்ஆர்ஏ கிடைக்கும்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டி ஹைக்குடன் கூடுதல் நன்மைகள்.. உத்தரவு வெளியானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ