குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு COVID-19 தொற்று உள்ளதா? நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு COVID-19  தொற்று உள்ளது என சந்தேகம் உள்ளதா அல்லது உறுதிபடுத்தப்பட்டுள்ளதா? அந்நிலையில்,  நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காண்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2020, 05:28 PM IST
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு COVID-19 தொற்று உள்ளதா? நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் title=

புது டெல்லி: கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபரை தனியாக உள்ள காற்றோட்டமான அறையில் தங்க வைக்க வேண்டும். நாள் முழுவதும் நோயாளியை கவனித்துக் கொள்ளும் நபர், நோயாளியின் உடல் நிலையை கண்காணிப்பத்தோடு, மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அதோடு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கும் உடல்நிலையை குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. நோயாளிக்கென்று ஒரு தனிஅறை மற்றும் தனிவாஷ்ரூம் இருக்க வேண்டும்.
2.  அந்த அறை நன்கு காற்றோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.
3. அதிகம் தொடும் இடங்களை, அதன் மேற்பரப்புகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது கட்டாயமாகும்.
 
கோவிட் -19 அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் ஹோம் குவாரண்டைனை பின்பற்றலாம் என குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அந்தநபருக்கு மிகவும் லேசான அறிகுறி இருந்தாலோ அல்லது மீண்டும் அறிகுறி தோன்றினாலோ, மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இத்தகைய நபர்களை செல்ஃப் குவாரண்டைன் செய்ய, குடும்ப உறுப்பினர்கள் அருகில் வராத வகையில், இல்லத்தில் தேவையான வசதியைக் கொண்டிருக்க வேண்டும். 

இந்த கட்டுரையில், கோவிட் -19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினரை கவனித்துக் கொள்வது தொடர்பான முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினரை வீட்டில் எப்படி பராமரிப்பது?
பாதிக்கப்பட்ட நபரை தனி குளியலறை கொண்டஒரு தனி படுக்கையறையில் தனிமையில் தங்க வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தனி குளியலறை சாத்தியமில்லை என்றால், அதிகம் தொடும் பகுதிகளான, கதவு கைப்பிடிகள் போன்றவற்றின்  மேற்பரப்புகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது முக்கியம். 

"பாதிக்கப்பட்ட நபர் தங்கள் சொந்தஇடத்தை தானே சுத்தம் செய்யவேண்டும். துப்புரவு மற்றும் அவருக்கு உணவு வழங்குதல் போன்றவற்றிற்கு, வீட்டிலுள்ள ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை சமையலறைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது" என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு தனிஅறை கொடுப்பதற்கான வசதி இல்லை என்றால், அவர் / அவள் ஒரு மருத்துவ மாஸ்கை அணிந்து கொள்வதோடு மற்றவர்களிடமிருந்து 3 அடி தூரம் விலகி இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கு, நன்கு காற்றோட்டமான அறை தேவை என்று நவி மும்பையின் அப்பல்லோ மருத்துவமனையின், தொற்று நோய்க்கான ஆலோசகர் டாக்டர் லக்ஷ்மன் ஜெசானி  கூறுகிறார். "பாதிக்கப்பட்டவரிடம் ஒரு பராமரிப்பாளர் 24x7 இருக்க  வேண்டும். அவர் நோயாளியின் ஆரோக்கியத்தை கண்காணித்து, மருத்துவமனையுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதோடு, மாவட்டகண்காணிப்பு அதிகாரிக்கு நிலையை தெரிவிக்க வேண்டும்" என்கிறார்.
 
பின்வரும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்: 
> நோயாளிமற்றும் பராமரிப்பாளர்  இருவரும்மாஸ்குகள், கையுறைகள் அணிவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

> குடும்பத்தில், வயதானவர்கள் மற்றும் வேறு ஏதேனும் நோய் உள்ளவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து நோயாளியை ஒதுக்கி வைக்க வேண்டும்.

> தற்போதைய நெறிமுறையின்படி சிகிச்சையை நிறைவு செய்ய வேண்டும். மேலும் அறிகுறி இல்லாதவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு 10 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், வீட்டில்  17 நாட்களுக்கு தனிமைப்படுத்தலாம்.

> பாதிக்கப்பட்ட நபர் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், அவர் / அவள் சோப்பு மற்றும்தண்ணீர் அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைஸரால் அடிக்கடிகைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

> பாதிக்கப்பட்ட நபர் சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 

வீட்டில் குவாரண்டைனில் உள்ளவர்களுக்கான வேறு  சில ஆலோசனைகள் :
> வீட்டிலேயே இருங்கள், பள்ளி, வேலை அல்லது பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

> நிறை யஓய்வு எடுத்து கொண்டு ஏராளமான திரவங்களை எடுத்துக் கொள்ளவும். சத்தான உணவை உண்ணவும்.

> இருமும் போதும், தும்மும் போது, வாயை முழங்கையினால் மூடிக்கொள்ளவும் அல்லது டிஷ்யூவை பயன்படுத்தவும். அந்த ட்ஷ்யூவை உடனடியாக அகற்றவும்.

> உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் சுகாதார மருத்துவரை அழைக்கவும்.

(மொழியாக்கம் : வித்யா கோபாலகிருஷ்ணன்)

Trending News