நாட்டின் குடியரசு தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுள்

இன்று நாட்டின் 70வது குடியரசுத் தினம். அதனை சிறப்பிக்கும் வகையாக டூடுலில் வைத்து கொண்டாடியது கூகுள் நிறுவனம்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 26, 2019, 11:36 AM IST
நாட்டின் குடியரசு தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுள்

ஒவ்வொரு முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பித்து, அவர்களுக்கு மரியாதையை செலுத்தி வருவது கூகுளின் வழக்கமான ஒன்று. இன்று நாடு முழுவதும் 70வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும், உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாகவும் இந்திய குடியரசு தினம் சிறப்பு டூடுளை கூகுள் உருவாக்கியுள்ளது.

இந்த கூகுளின் டூடுளின் பின்னணியில் குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளது. கூகுள் என்ற வார்த்தையை பச்சை, மஞ்சள், சிகப்பு, ஊதா, நீலம் என வண்ணமையமாக வடிவமைத்துள்ளது. இதில் இந்தியாவின் நிலபரப்பு, தேசிய பறவை, இந்திய வீர்களின் அணிவகுப்பு, இந்தியாவின் பாரம்பரிய சின்னம் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவையும் இந்திய கலாசார மரபுகளையும் குறிக்கும் விதமாக இந்த கூகுள் டூடுள் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.