Indian Reserve Bank: நீங்களும் வீட்டுக் கடன், கார் கடன் அல்லது வங்கியில் ஏதேனும் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். தொடர்ந்து மூன்றாவது முறையாக, வரவிருக்கும் இருமாத கொள்கை மதிப்பாய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தை அறிவிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெப்போ விகிதம் பழைய நிலையிலேயே தொடரும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பிற்குள்ளேயே உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே இருக்கும்
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்கிறது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் கடந்த இரண்டு இருமாத கொள்கை மதிப்பாய்வு கூட்டங்களிலும், ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டம் ஆகஸ்ட் 8-10 தேதிகளில் நடைபெறும். ஆகஸ்ட் 10ஆம் தேதி கொள்கை முடிவை ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார்.
மேலும் படிக்க | Post Office Schemes: இந்த திட்டங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்!
இதுகுறித்து, பாங்க் ஆப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், "ரிசர்வ் வங்கி விகிதங்களில் தற்போதைய நிலையைத் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணவீக்க விகிதம் தற்போது 5 சதவீதத்திற்கும் கீழ் இயங்குவதே இதற்குக் காரணம். ஆனால், வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதில் சில அதிகரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது" என்றார். கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் உபாசனா பரத்வாஜ், "ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு பணப்புழக்கம் சாதகமாகிவிட்டதால், ரிசர்வ் வங்கி தற்போதைய நிலைப்பாட்டை கடைபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் ஏற்படும் பணவீக்கத்தின் மீதுதான் அனைவரின் பார்வையும் இருக்கும் என்று உபாசனா பரத்வாஜ் கூறினார். ICRA தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், காய்கறி விலை உயர்வு காரணமாக, 2023ஆம் ஆண்டு ஜூலையில் CPI அல்லது சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரெப்போ ரேட் மீதான தற்போதைய நிலையுடன், MPC இன் மிகவும் கூர்மையான கருத்தைக் காணலாம் என்று அவர் கூறினார்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதத்தை தான் ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது. ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதன் விளைவாக வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் விகிதத்தையும் உயர்த்தும். இதன் தாக்கம் தான் வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் பிரதிபலிக்கும். இது கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் மாதத் தவணைகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! டிஏ உயர்வு... இதோ அப்டேட்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ