புதுடெல்லி: ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2021 வெளியிடப்பட்டது. அதில் 1007 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற ஆச்சரியத் தகவலை வெளியாகியிருக்கிறது.
Hurun India Rich List 2021: பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவரின் வயது 23 தான் தெரியுமா?
அதானி பவர் தவிர, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடையவை.
IIFL Wealth Hurun India 2021ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 119 நகரங்களில் வசிக்கும் 1,007 நபர்களின் மொத்த சொத்துக்கள் 1,000 கோடி ரூபாயாக இருக்கிறது. ஐஏஎன்எஸ் செய்திகளின் படி, பணக்கார பட்டியலில் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 51 சதவிகிதம் அதிகரித்துள்ளது, சராசரியாக 25 சதவிகிதம் அளவில் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
Video Link: https://t.co/FyrHijBwoI
The @IIFLWEALTH Hurun India Rich List 2021 finds 237 India billionaires, more than quadruple that of ten years ago. The number of women on the list is 47 this year, up from 5 ten years ago. The youngest ten years ago was 37 and today is 23, pic.twitter.com/B8RjIDxzt1
— HURUN INDIA (@HurunReportInd) October 1, 2021
ஹுருன் இந்தியாவின் பணக்கார பட்டியல் 2021இல் 237 இந்திய பில்லியனர்கள் உள்ளனர். இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகம். இந்த பட்டியலில் உள்ள பெண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 47 ஆக உள்ளது,
இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு 5 என்ற அளவில் தான் இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு சொத்துப்பட்டியலில் 37 வயதுக்கு அதிகமானவர்கள் தான் இடம் பிடித்திருந்தார்கள் என்றால் தற்போது 23 வயதேயான இளைஞர்களும் கோடீஸ்வராக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, 894 தனிநபர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 113 பேரின் சொத்து குறைந்துள்ளது. ஏற்கனவே இருந்தவர்களுடன் 229 பேர் புதிதாக பட்டியலில் இணைந்துள்ளனர். 51 பேர் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 58 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்
மருந்துத்துறையை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் பணக்காரப் பட்டியலில் அதிகமாகவும், முன்னணி இடங்களிலும் உள்ளது
ரசாயனங்கள் மற்றும் மென்பொருள் துறைகளை சேர்ந்தவர்கள் புதிய பணக்காரர்கள் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. முதலிடத்தில் தொடரும் ஃபார்மாத் துறையை சேர்ந்த பணக்காரர்கள் 130 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, தொடர்ந்து 10வது ஆண்டாக இந்தியாவின் பெரும் பணக்காரராக 7,18,000 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
Also Read | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?
கவுதம் அதானி, பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார். 5,05,900 கோடியுடன், கவுதம் அதானி மற்றும் குடும்பத்தினர் இரண்டு இடங்கள் முன்னேறி IIFL ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2021இல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ .9 லட்சம் கோடி. அதானி பவர் தவிர, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடையவை.
HCL இன் சிவ் நாடார் மூன்றாவது இடத்தில் உள்ளார். கவுதன் அதானி ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களை உருவாக்கிய ஒரே இந்தியர். மேலும், பயணம், சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் போன்ற கோவிட் தொற்று நோயால் தொழில் பாதிக்கப்பட்டிருந்தாலும், HCL நிறுவனத்தின் ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அவரது சொத்துக்கள் 67 சதவீதம் உயர்ந்து 2,36,600 கோடி ரூபாயாக உள்ளது. டிசம்பர் 2020 ல் முடிவடைந்த 12 மாதங்களில் HCL நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டிய மூன்றாவது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது.
Also Read | SBI Cards சூப்பர் செய்தி: அக்டோபர் 3 முதல் பண்டிகை கால cashback offer!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR